தென் அமெரிக்க நாடான சிலியின் முன்னாள் ஜனாதிபதி செபஸ்டியன் பினேரா ஹெலிக்கொப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
பெரும் பணக்காரரான இவர் இரண்டு முறை சிலி நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்துள்ளார்.
இந்நிலையில், சிலியின் பிரபல சுற்றுலா தலமான லகோ ரங்கொ பகுதிக்கு செபஸ்டியன் பினேரா தனது சொந்த ஹெலிக்கொப்டரை செலுத்திச் சென்றுள்ளார்.
அந்த ஹெலிக்கொப்டரில் செபஸ்டியன் பினேரா உள்ளிட்ட மொத்தம் 4 பேர் பயணித்துள்ளனர். திடீரென அந்த ஹெலிக்கொப்டர் தெற்கு சிலியில் உள்ள ஏரியில் விழுந்துள்ளது.
தகவல் அறிந்த மீட்புப் படையினர் விரைந்து சென்று முன்னாள் ஜனாதிபதி செபஸ்டியன் பினேரா உடலைக் கண்டுபிடித்துள்ளனர். அவருடன் பயணம் செய்த 3 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் செபஸ்டியன் பினேராவின் மரணத்தை சிலி உள்துறை அமைச்சர் கரோலினா தோஹா உறுதிப்படுத்தியுள்ளார்.
அவரது உடல் ஏரியில் இருந்து மீட்கப்பட்டதையும் அவர் உறுதி செய்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி செபஸ்டியன் பினேரா மரணத்தை முன்னிட்டு மூன்று நாட்கள் தேசிய துக்கமாக அனுசரிக்கப்படும் என்று சிலியின் அதிபர் கேப்ரியல் போரிக் அறிவித்துள்ளார்.