நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை அவசரஅவசரமாக அரசாங்கம் நிறைவேற்றியதற்கான காரணம் குறித்து மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் சந்தேகம்; -உடனடியாக நீக்க கோரிக்கை
இலங்கை அரசாங்கம் நிறைவேற்றியுள்ள நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் குறித்து மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை உருவாக்கும் செயற்பாடுகளில்காணப்பபட்ட இரகசியதன்மையையும் அதனை அவசரஅவசரமாக நிறைவேற்றியதையும் கண்டிப்பதாக தெரிவித்துள்ள மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் அரசாங்கத்தின் நோக்கம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.
அரசாங்கம் அரசமைப்பு கொள்கைகளை புறக்கணித்துள்ளமை குறித்தும் மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் கரிசனை வெளியிட்டுள்ளது.
சட்டத்தை அவசரஅவசரமாக நிறைவேற்றுவதற்கான நோக்கம் குறித்து கேள்வி எழுப்பியுள்ள மாற்றுக்கொள்கைளிற்கான நிலையம் இந்த சட்டம் கருத்து சுதந்திரம் சட்டத்தின் ஆட்சிக்கு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் முன்வைத்த திருத்தங்களை அரசாங்கம் முழுமையாக கருத்தில்எடுக்க தவறியமையும் குறித்தும் மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் கவலை வெளியிடடுள்ளது.
நீதிமன்றத்தின் பரிந்துரைகளை தெரிவுசெய்து நடைமுறைப்படுத்தியதன் காரணமாக நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் அரசமைப்பிற்கு உகந்ததா என்ற கரிசனைகள் எழுந்துள்ளன எனவும் குறிப்பிட்டுள்ள மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் இது ஆபத்தான முன்னுதாரணத்தை உருவாக்குகின்றது சட்டத்தின் ஆட்சியை பலவீனப்படுத்துகின்றது எனவும் தெரிவித்துள்ளது.
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தினால்உருவாக்கப்படவுள்ள ஆணைக்குழுவிற்கான பரந்துபட்ட அதிகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ள மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் தீங்கிழைக்கும் மற்றும் விருப்பம் போன்ற முக்கிய சொற்களின் தெளிவின்மை மற்றும் சுயாதீன நிபுணர்களின் செயற்பாடுகள் குறித்தும் கரிசனை வெளியிட்டுள்ளது.
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தின் செயல்முறை மற்றும் சாரத்தினை அரசாங்கம் மீளாய்வுசெய்யவேண்டும் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை அரசாங்கம் உடனடியாகநீக்கவேண்டும் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் குறித்து கரிசனைகளிற்கு உண்மையான சட்டத்தை அறிமுகப்படுத்தவேண்டும் எனவும் மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் தெரிவித்துள்ளது.