செங்கடலிற்கு இலங்கை தனது கடற்படை கப்பலொன்றை அனுப்பியதை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் உறுதிசெய்துள்ளார்.
செங்கடலில் முன்னெடுக்கப்படும் புரொஸ்பெரிட்டி கார்டியன் நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதற்காக இலங்கை தனது கடற்படை கப்பலை அனுப்பியது என ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
பாத்பைன்டர் அமைப்பின் இந்துசமுத்திர பாதுகாப்பு குறித்த மாநாட்டில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா வழங்கிய கடற்படை கப்பலை செங்கடலிற்கு இலங்கை அனுப்பியதை சுட்டிக்காட்டிய அமெரிக்க தூதுவர் உலகலாவிய சவால்களை எதிர்கொள்வதில் இலங்கையின் செயல்ஊக்கமான நடவடிக்கைகளை பாராட்டியுள்ளார்.
செங்கடல் ஏடன் வளைகுடா அராபிய கடல் போன்ற பகுதிகளில் சரக்குகப்பல்கள் ஹெளத்திகிளர்ச்சியாளர்களால் தாக்கப்படும் ஆபத்துள்ள நிலையில் சரக்குகப்பல்களை பாதுகாப்பதற்காக இலங்கை சர்வதேச கூட்டணியில் இணைந்துகொண்டது என ஜூலிசங் தெரிவித்துள்ளார்.
இலங்கை தனது கடற்பகுதியை பாதுகாக்ககூடிய திறனை மேலும் அதிகரித்துக்கொள்வது குறித்து அமெரிக்கா அர்ப்பணிப்புடன் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.