காசாவில் இடம்பெறும் இனப்படுகொலை குற்றங்களுடன் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு தொடர்புள்ளதாக குற்றம்சாட்டியுள்ள சிட்னியை சேர்ந்த சட்ட நிறுவனம் சர்வதேச நீதிமன்றம்இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குஎழுதியுள்ள கடிதத்தில் சிட்னியின் சட்ட நிறுவனம் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அமைச்சர்களிற்கு இஸ்ரேல் காசாவில் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளுடன் தொடர்பிருக்கலாம் என தெரிவித்துள்ளது.
காசாவில் இடம்பெறும் இனப்படுகொலையுடன் அவுஸ்திரேலிய அமைச்சர்களிற்கு தொடர்புள்ளதை தொடர்ந்து ஆவணப்படுத்திவந்துள்ளதாக பேர்ச்குரொவ்லீகல் என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.
100க்கும் மேற்பட்ட அவுஸ்திரேலிய சட்டத்தரணிகள் இந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
இஸ்ரேலின் நடவடிக்கைகளிற்கு தயக்கமற்ற தெளிவான ஆதரவுள்ளதாக சிட்னியின் சட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிற்கு சென்று இராணுவத்தில் இணைந்துகொள்ளும் அவுஸ்திரேலியர்கள் காசாவில் போரில் ஈடுபடுகின்றனர் இது வெளிப்படையாக இடம்பெறுகின்றது எனவும் சிட்னியை சேர்ந்த சட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும் இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள அவுஸ்திரேலிய பிரதமர் தனது அரசாங்கம் காசாவில் யுத்த நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துவருவதாக தெரிவித்துள்ளார்.
நம்பகதன்மை இல்லாத ஒரு விடயம் குறித்து நான் கருத்துகூறவிரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.