செல்வந்தர்கள் பட்டியலில் பெஸோஸ் மீண்டும் முதலிடம்

உலகின் மிகப் பெரிய செல்வந்தர்களின் பட்டியலில் ஜெவ் பெஸோஸ் மீண்டும் முதலிடம் பெற்றுள்ளார். இதுவரை முதலிடத்திலிருந்த இலோன் மஸ்க் 2 ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

புளூம்பேர்க் செல்வந்தர்கள் பட்டியிலன்படி அமேஸன் நிறுவன ஸ்தாபகர் ஜெவ் பெஸேஸின் செல்வ மதிப்பு 200 பில்லியன் டொலர்களாகும். டுவிட்டர், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் இலோன் மஸ்க்கின் செல்வ மதிப்பு 198 பில்லியன் டொலர்களாகும்.

பிரான்ஸை சேர்ந்த, LVMH நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பேர்னாட் ஆர்னோல்ட் 197 பில்லியன் டொலர்களுடன் 3 ஆம் இடத்தில் உள்ளார்.

டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளின் விலை கடந்த சில மாதங்களில் 25 சதவீதம் வீழ்ச்சியடைந்ததால் மஸ்கின் செல்வ மதிப்பு 30 பில்லியன் டொலர்களால் குறைவடைந்தது.

அதேவேளை, அமேஸன் நிறுவனத்தின் பங்குகளின் விலை அதிகரித்தமையால் பெஸோஸின் செல்வ மதிப்பு அதிகரித்துள்ளது.

Related posts