கடந்த 2023-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று வருகிறது. இந்த 96-வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த உறுதுணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை ‘ஒப்பன்ஹெய்மர்’ படத்தில் நடித்த ராபர்ட் டவுனி ஜூனியர் வென்றார்.
கிறிஸ்டோஃபர் நோலனின் ‘ஒப்பன்ஹெய்மர்’ படம் 13 பிரிவுகளில் இடம்பெற்றுள்ளது. இந்த விழாவில் சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த உறுதுணை நடிகர், சிறந்த உறுதுணை நடிகை, சிறந்த திரைக்கதை, சிறந்த ஒரிஜினல் பாடல், சிறந்த ஒரிஜினல் ஸ்கோர், சிறந்த அனிமேஷன் Feature, சிறந்த ஆவணப்பட Feature, சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த ஒப்பனை, சிறந்த புரொடக்ஷன் டிசைன், சிறந்த ஒலி, சிறந்த பிலிம் எடிட்டிங், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ், சிறந்த லைவ் ஆக்ஷன், சிறந்த ஆவணப்பட ஷார்ட் உள்ளிட்ட பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.
சிறந்த உறுதுணை நடிகர் விருதுக்கு ஐந்து பேர் பரிந்துரைக்கப்பட்டனர். இதில் ‘ஒப்பன்ஹெய்மர்’ படத்தில் நடித்த ராபர்ட் டவுனி ஜூனியர், ’அமெரிக்கன் ஃபிக்ஷன்’ படத்தின் நடித்த ஸ்டெர்லிங் கே.பிரவுன், ’கில்லர்ஸ் ஆஃப் தி பிளவர் மூன்’ படத்தில் நடித்த ராமர்ட் டி நிரோ, ‘பார்பி’ படத்தின் நடித்த ரையான் கோஸ்லிங் மற்றும் ‘புவர் திங்ஸ்’ படத்தில் நடித்த மார்க் ரஃபலோ ஆகியோர் பரிந்துரைப்பட்டிருந்தனர்.
இந்த பட்டியலில் தற்போது ‘ஒப்பன்ஹெய்மர்’ படத்தில் நடித்த ராபர்ட் டவுனி ஜூனியர் சிறந்த உறுதுணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளார்.