நாடாளுமன்ற தேர்தலில் மைக் சின்னத்தில் போட்டி – சீமான்

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சிக்கு 2019, 2021 தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் தேர்தல் ஆணையத்திடம் தாமதமாக விண்ணப்பித்ததால் தற்போதைய நாடாளுமன்ற தேர்தலில் சீமான் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைக்கவில்லை.

இதையடுத்து நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னத்தை ஒதுக்கீடு செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. கரும்பு விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மைக் சின்னத்திற்கு பதிலாக வேறு சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தேர்தல் ஆணையத்திடம் மின்னஞ்சல் வாயிலாக கோரிக்கை வைத்தனர். படகு அல்லது பாய்மர படகு சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தரப்பு கோரிக்கை வைத்தது.

இதையடுத்து வேறு சின்னம் ஒதுக்க வேண்டும் என்ற சீமானின் கோரிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் நிராகரித்தது. மேலும் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டுள்ள மைக் சின்னத்திலே போட்டியிடுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

“கடைசி நொடி வரை விவசாயி சின்னத்திற்காக போராடி பார்த்தேன். ஆனால் கிடைக்கவில்லை. அதனால் தான் மைக் சின்னத்தில் போட்டியிடுவது என்று முடிவெடுத்தோம். இவ்வளவு இடையூறுகளையும் தாங்கிக்கொண்டு நாங்கள் களத்தில் நிற்பது மக்களுக்காகதான். மக்கள் எங்களை கைவிட்டுவிட மாட்டார்கள் என்று நம்புகிறோம்.

கூட்டணி வைத்திருந்தால் நான் கேட்ட சின்னம் வந்திருக்கும். அப்படி கூட்டணி வைத்தவர்களுக்கு சின்னங்கள் வந்துள்ளது. நான் கூட்டணி வைக்க மறுத்துவிட்டேன். எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன். இந்த நாட்டில் நல்ல அரசியலை உருவாக்க நினைக்கிறேன். அதில் எந்த சூழலிலும் என் வாழ்நாளில் எந்த சமரசமும் செய்ய மாட்டேன்.

சின்னத்தில் மட்டும் விவசாயி அல்ல நான். உண்மையிலேயே விவசாயிதான். எனவே, நாங்கள் நம்பிக்கையோடு பயணிக்கிறோம். கொஞ்சம் தாமதம் தான். சின்னம் முதலிலேயே சின்னம் முதலிலேயே இருந்திருந்தால் பாதி தொகுதிக்கு சென்றிருப்பேன். இப்போது முதலில் இருந்து தொடங்க வேண்டும். நாளையில் இருந்து பிரச்சாரம் செல்கிறேன்.

எங்களை சுயேச்சையாக நிறுத்தி, 40 தொகுதிகளுக்கும் 40 சின்னங்கள் கொடுக்க வேண்டும் என்பது தான் அவர்களின் எண்ணம். ஏழு சதவிகித வாக்குக்கே பயம் என்றால், இந்தத் தேர்தலில் நான் என்ன செய்வேன் என்று யாருக்கு தெரியும். மைக் புரட்சியாளர்கள் பயன்படுத்திய ஒன்று. மைக் இல்லாமல் புரட்சியே இல்லை. மாற்றத்தால் எங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை.” இவ்வாறு அவர் கூறினார்.

Related posts