4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரர் சுகவீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ராவணா பலய அமைப்பின் செயலாளர் நாயகம் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
ஞானசார தேரர் இதற்கு முன்னரும் சுகவீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தண்டனைக்கு எதிராக கலகொட அத்தே ஞானசார தேரர் மேன்முறையீடு செய்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தியமைக்காக கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.