காசாவின் கான்யூனிசிற்கு மீண்டும் திரும்பிச்சென்றுள்ள மக்கள் முன்னர் தங்கள் வீடுகள் காணப்பட்ட பகுதியில் தற்போது இடிபாடுகள் காணப்படுவது குறித்து அதிர்ச்சி வெளியிட்டுள்ளனர்.
அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டதால் என்னால் எனது வீட்டை கண்டுபிடிக்கமுடியவில்லை மாக்டி அபு சாஹ்ரூர் என்பவர் தெரிவித்துள்ளார்.
எனது வீடு எங்கே எனது இடம்எங்கே என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தனது முதல்பெயர் ஹனான் என தெரிவித்த பெண்ணொருவர் எனது வலியை வேதனையை வர்ணிப்பதற்கு வார்த்தைகள் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
எங்களின் நினைவுகள் எங்களின் சிறுவயது எங்களின் குடும்பங்கள் என அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன என அவர் கலங்கிய குரலில் தெரிவித்துள்ளார்.
அவர் தனது வீட்டின் சிதைவுகளில் இருந்து மீட்ட பொருட்களுடன் காணப்பட்டார் என சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது.
ஒருமாதகால சண்டைக்கு பின்னர் இஸ்ரேலிய படையினர் கான்யூனிஸ் பகுதியிலிருந்து வெளியேறியுள்ளன.