தென்கொரிய பொதுத்தேர்தலில் ஆளும் கட்சி படுதோல்வியடைந்துள்ளது.
எதிர்கட்சியான ஜனநாயக கட்சி பெரும் வெற்றியை பெற்றுள்ளது.
300 ஆசனங்களிற்கான தேர்தலில் எதிர்கட்சியான ஜனநாயக கட்சியும் சிறிய கட்சிகளும் இணைந்து 192 ஆசனங்களை கைப்பற்றியுள்ளன.
இந்த தேர்தல் ஜனாதிபதி யூன் சுக் இயோலின் ஆட்சி குறித்த சர்வஜனவாக்கெடுப்பாக கருதப்பட்டது.தேர்தல் முடிவுகளை தொடர்ந்து அவரது கட்சி தலைவர் பதவியை இராஜினாமா செய்துள்ளார் பிரதமரும் பதவியை இராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.