ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி (Dr. Ebrahim Raisi) மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையில் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் சற்று முன்னர் திறந்துவைக்கப்பட்டது.
மகாவலி அபிவிருத்தித் திட்டத்துக்குப் பின்னர் இலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட பாரிய நீர்ப்பாசனத் திட்டங்களில் இத்திட்டமும் ஒன்றாகும்.
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் வெற்றிக்காக ஈரான் வழங்கிய தொழில்நுட்ப ஆதரவிற்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஈரானின் உதவியின்றி இலங்கையினால் உமா ஓயாவில் இருந்து கிரிந்தி ஓயாவிற்கு நீரை கொண்டு செல்ல முடியாது என உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்ட திறப்பு விழா நிகழ்வில் தெரிவித்தார்.
உலகளாவிய தெற்கு நாடுகள் தமது அடையாளத்தையும் சுதந்திரத்தையும் நிலைநாட்ட விரும்புவதை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, அதற்காக உலகளாவிய தெற்கு நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.