அனுமதி பெற்று இயங்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தைத் தவிர வேறு எந்த தரப்பினரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி பணம் பெறுவதற்கு அதிகாரம் இல்லை என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அநுராதபுரத்தை அண்மித்த விஹாரை ஒன்றின் விஹாராதிபதி தலைமையில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்று தருவதாக கூறி பணம் பெற்ற சம்பவம் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதனடிப்படையில், முறைப்பாட்டுடன் தொடர்புடைய தரப்பினரை கைது செய்யுமாறு புலனாய்வு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது என்றார்.
அதுமட்டுமன்றி, இவ்வாறான சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் ஆட்கடத்தல்காரர்களை கைது செய்ய சட்டத்தை அமுல்படுத்துமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புலனாய்வு பிரிவுக்கும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இவ்வாறான மோசடிகளை தடுப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்வதோடு, விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் உயர் நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.