டுபாயின் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்தில் புதிய முனையத்தின் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சுமார் 35 பில்லியன் டொலர் செலவில் கட்டப்படும் அது, உலகின் மிகப் பெரிய முனையமாக இருக்கும் என்று டுபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம், எக்ஸ் சமூகதளத்தில் பதிவிட்டார்.
முனையம் முழுமையாக இயங்கும்போது ஓராண்டுக்கு 260 மில்லியன் பயணிகள் வரை அங்கு போகலாம். தற்போதுள்ள டுபாய் விமான நிலையத்தைவிட அது 5 மடங்கு பெரிதாக இருக்கும்.
முனையத்தின் கட்டுமானப் பணிகளின் முதற்கட்டம் 10 ஆண்டுகளுக்குள் நிறைவடையும். ஆண்டுதோறும் 150 மில்லியன் பயணிகள் அங்கு செல்வதற்கு அது வழிவகுக்கும்.