கங்கைக்கு கவிதை மூலமாக வைரமுத்து பதில்

“இசையமைப்பாளர் கங்கை அமரன், வைரமுத்துவை எச்சரித்து பேசி வீடியோவை நேற்று வெளியிட்டார். அந்த வீடியோவில் அவர் பேசியதாவது, வைரமுத்து நல்ல கவிஞர் என்பதை ஒத்துக்கொள்ளலாம். ஆனால் அவர் நல்லவர் இல்லை. தடுக்க ஆள் இல்லாததால் இப்படி செய்கிறார். இனிமேல் இளையராஜாவைப் பற்றி அவமரியாதையாகப் பேசினால் அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். இளையராஜா இல்லை என்றால் இன்று வைரமுத்து என்ற பெயரே இருக்காது. இவ்வாறு பேசினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த பரபரப்பு அடங்கும் நிலையில், மீண்டும் வைரமுத்து இளையராஜாவை மறைமுகமாக சாடி கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

உழைப்பு, காதல், பசி
இந்த மூன்றுமே
மண்ணுலகை இயக்கும்
மகா சக்திகள்

அந்த உழைப்பு
உரிமை பெற்றநாள்
இந்த நாள்

தூக்குக் கயிற்றுக்குக்
கழுத்து வளர்த்தவர்களும்
குண்டுகள் குடைவதற்காக
நெஞ்சு நீட்டியவர்களும்
வீர வணக்கத்துக்குரியவர்கள்

இந்தச் சிறப்பு நாளுக்கு
ஒரு சிவப்புப் பாடல் காணிக்கை

எழுத்து வைரமுத்து
இசை இளையராஜா
குரல் ஜேசுதாஸ்

இந்தப் பாட்டு
இந்த மூவருக்கு மட்டுமல்ல
உழைக்கும் தோழர்
ஒவ்வொருவருக்கும் சொந்தம்

Related posts