அதிக வெப்பம் ; மக்கள் அவதானம்!

நாட்டில் பல பிரதேசங்களில் வெப்பம் இன்று சனிக்கிழமை (04) அதிகரித்துக் காணப்படுவதால் அதிக அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் வெப்பச் சுட்டெண் அதிகரித்துக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேலும், மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் வெப்பம் அதிகரித்துக் காணப்படும் .

அத்துடன், இந்த பகுதிகளில் அதிக வெப்பம் நிலவுவதால் வெப்பப் பிடிப்புகள் , வெப்ப சோர்வு நிலை போன்ற பாதிப்புக்கள் ஏற்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது .

போதுமான அளவு தண்ணீர் அருந்துதல் , முடிந்தவரை நிழலான இடங்களில் ஓய்வெடுத்தல், கடுமையான வெளிப்புற செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தல் போன்ற சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்று அறிவிக்கப்பட்டுள்ளது .

Related posts