30 வருட கால யுத்த முடிவுக்கு இன்றுடன் 15 வருடங்கள்!

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு இன்றுடன் (18) 15 வருடங்கள் நிறைவந்துள்ளன.

2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி நந்திக்கடல் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ள பிரபாகரன் இராணவ வீரர்களால் கொல்லப்பட்டதையடுத்து அதுவரை இடம்பெற்ற கொடூர யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

உலகின் மிகப்பெரிய மனிதாபிமான நடவடிக்கையின் ஊடாக விடுதலைப் புலிகளால் பிணைக் கைதிகளாக இருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களை மீட்டெடுத்த பெருமையும் இந்நாட்டின் பாதுகாப்புப் படையினருக்கு உண்டு.

அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மனிதாபிமான நடவடிக்கையை தலைமை தாங்கியதுடன், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக செயற்பட்டார்.

இதேவேளை, 15 ஆவது தேசிய படைவீரர் தினத்தை முன்னிட்டு கடற்படையின் 3,146 சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட கடற்படையினர் அடுத்த தரத்திற்கு பதவி உயர்வு பெற்றுள்ளதுடன், 1,300 இற்கும் மேற்பட்ட இலங்கை இராணுவ வீரர்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.

அத்துடன், மாவீரர் தின நிகழ்வு நாளை (19) பிற்பகல் பத்தரமுல்லை நாடாளுமன்ற விளையாட்டரங்கில் உள்ள இராணுவ நினைவுத்தூபிக்கு முன்பாக நடைபெற உள்ளது.

நாளை மாலை 4.00 மணிக்கு தேசிய படைவீரர் தின நிகழ்வுகள் நடைபெற உள்ள நிலையில், இதன் காரணமாக பொல்துவ சந்தி மற்றும் கியன்ஹேம் சந்தியிலிருந்து பாராளுமன்ற வீதியின் நுழைவு மற்றும் வெளியேறும் பாதைகள் பிற்பகல் 3 மணி முதல் மூடப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts