புதிய வானிலை அறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
பருவமழைக்கு முந்தைய வானிலையின் தாக்கம் காரணமாக கடும் மழை மற்றும் காற்றின் நிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.
——-
மலையக பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள படித்த யுவதிகளுக்கான சுயத்தொழிலை ஊக்கிவிப்பதற்கான செயற்பாடுகளை எமது அமைப்பின் ஊடாக எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்பட உள்ளதாக அண்மிக குரு அமைதிதுதுவர் வாழும் கலை பயிற்சி நிலையத்தின் ஸ்தாபகர் ஸ்ரீ.ஸ்ரீ.ரவிசங்கர் குருஜி தெரிவித்தார்.
இன்று (19) இலங்கை தொழிலாளர் காங்ரஸின் காங்ரஸின் பொதுச்செயலாளரும் நீர் வழங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு சமுக அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் நுவரெலியா கிரேன்ட் உணவகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன் போது இந்த கலந்துரையாடலில் இலங்கை தொழிலாளர் காங்ரஸின் தவிசாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதுபாண்டி உறுப்பினருமான மருதுபாண்டி ராமேஸ்வரன் பெருந்தோட்ட நிறுவனத்தின் தலைவர் பாரத் அருள்சாமி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் இனைப்புச்செயலாளர் அர்ஜுன் ஜெயராஜ் கொட்டகலை பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் ராஜமணிபிரசாத் நுவரெலியா பிரதேச சபையின் முன்னாள் தலைவர் யோகராஜ் இலங்கை தொழிலாளர் காங்ரஸின் காங்ரஸின் பிரதி தவிசாளர் ராஜதுரை என பலரும் கலந்து கொண்டனர்.
இதேவளை இலங்கை நாட்டில் தற்போது 12 அறநெறி பாடசாலைகள் இயக்கி வருகிறது அதில் நுவரெலியா மாவட்டத்தில் இது போன்ற அறநெறி பாடசாலைகளை உருவாக்க அமைச்சர் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் இணைந்து காணி வசதிகளை பெற்று தரவேண்டும். தமது அமைப்பினை விரிவுபடுத்த எதிர்காலத்தில் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கபட வேண்டுமென குறிப்பிட்டார்.