பாயல் கபாடியா படத்துக்கு உயரிய ‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருது

பாயல் கபாடியா இயக்கியுள்ள ‘ஆல் வீ இமேஜின் அஸ் லைட்’ திரைப்படத்துக்கு கான் திரைப்பட விழாவில் இரண்டாவது உயரிய விருதான ‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

கான் சர்வதேச திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டின் கான் நகரில் கடந்த மே 15ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை நடந்தது.

இதில் எழுத்தாளரும் இயக்குநருமான பாயல் கபாடியாவின் முதல் முழுநீள திரைப்படமான ‘ஆல் வீ இமேஜின் அஸ் லைட்’ போட்டியிட்டது.

இந்தியா சார்பில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கப்பனை விருதுக்குப் போட்டியிடும் முதல் திரைப்படம் என்ற இப்படம் பெற்றது.

கனி குஸ்ருதி, திவ்ய பிரபா உள்ளிட்டோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்த இப்படம், மும்பையில் வாழும் இரண்டு கேரள செவிலியர்களைப் பற்றி பேசுகிறது.

இப்படத்துக்கு கான் விழாவில் தங்கப்பனை விருதுக்கு அடுத்த உயரிய விருதாக கருதப்படும் ‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

மேலும் இப்படத்தின் திரையிடலுக்குப் பிறகு பார்வையாளர்கள் எழுந்து நின்று 8 நிமிடங்கள் தொடர்ந்து கைதட்டி வரவேற்பு கொடுத்தனர்.

இதற்கு முன்பு 1983ஆம் ஆண்டு மிருணள் சென் இயக்கிய ‘கரிஜ்’ திரைப்படம் கான் திரைப்பட விழாவில் ஜூரி விருது வென்றது குறிப்பிடத்தக்கது.

30 ஆண்டுகளுக்குப் பிறகு கான் விழாவில் பிரதான பிரிவில் போட்டியிட்டு விருது வென்ற முதல் திரைப்படம் இதுவாகும்.

விருதைப் பெற்றுக் கொண்ட இயக்குநர் பாயல் கபாடியா, ‘அடுத்த இந்திய படம் விருது பெறுவதற்கு இன்னொரு 30 ஆண்டுகள் காத்திருக்க கூடாது’ என்று பேசினார்.

Related posts