ஆறுவார கால யுத்த நிறுத்தம்

யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கான இஸ்ரேலின் யோசனையை வெளியிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஹமாஸ் அதனை ஏற்றுக்கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்காக நேரம் இது என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஆறுவாரகால யுத்தநிறுத்த திட்டத்தினை அமெரிக்க ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.

இந்த திட்டத்தின்படி காசாவில்பொதுமக்கள் அதிகமாகவாழும் பகுதிகளில்; இருந்து இஸ்ரேலிய படையினர் வெளியேறுவார்கள்.

மனிதாபிமான உதவிகள் அதிகரிக்கப்படும் பணயக்கைதிகள் சிலர் விடுதலை செய்யப்படுவார்கள் என ஜோபைடன் முன்வைத்துள்ள திட்டத்தில் தெரிவி;க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த திட்டத்தினை சாதகமாக பரிசீலிக்கவுள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவி;த்துள்ள அமெரிக்க ஜனாதிபதி யுத்த நிறுத்த திட்டத்தின் முதல் கட்டத்தில் முழுமையான யுத்தநிறுத்தம் நடைமுறைக்கு வரும் என தெரிவித்துள்ளதுடன் இஸ்ரேலிய இராணுவத்தினர் விலக்கிக்கொள்ளப்படுவார்கள் பாலஸ்தீனிய சிறைக்கைதிகள் விடுதலையும் காசாவின் மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் இருந்து இஸ்ரேலிய படையினர் விலக்கிக்கொள்ளப்படுவதும் இடம்பெறும் என தெரிவித்துள்ளார்.

Related posts