‘மெட்ராஸ்காரன்’ படப்பிடிப்பு நிறைவு!

மலையாள நடிகர் ஷேன் நிகாம் தமிழில் நடிகராக அறிமுகமாகும் ‘மெட்ராஸ்காரன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு வெளியான ‘கிஸ்மத்’ படம் மூலம் மலையாள சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஷேன் நிகாம்.

அவரின் ‘இஷ்க்’, ‘கும்பளாங்கி நைட்ஸ்’, ‘ஆர்டிஎக்ஸ்’ படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.

தற்போது அவர் தமிழில் நடிகராக அறிமுகமாகிறார்.

‘மெட்ராஸ்காரன்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை வாலி மோகன் தாஸ் இயக்கியுள்ளார். கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தை ஜெகதீஸ் தயாரிக்கிறார்.

ஒரு சிறு ஈகோ, ஒருவனின் வாழ்வை எந்த எல்லைக்கு கூட்டிச்செல்லும் என்பதே இப்படத்தின் மையம்.

சிறு சம்பவம் பெரும் பிரச்சினையாக, மாறி இருவர் வாழ்க்கையை எப்படி புரட்டிப் போடுகிறது என்பதை த்ரில்லர் பாணியில் சொல்லும் படமாக இது இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, மதுரை, கொச்சி ஆகிய இடங்களில் நடைபெற்றது.

இந்நிலையில் தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகவும், விரைவில் ட்ரெய்லர் வெளியாகும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.

Related posts