நடிகர் கவுண்டமணி கதாநாயகனாக நடிக்கும் புதிய படமான ‘ஒத்த ஓட்டு முத்தையா’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
அவருடன் இணைந்து நடிகர்கள் ரவிமரியா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, சிங்கமுத்து ஆகியோர் நடித்துள்ளனர்.
மேலும், நடிகர் சிங்கமுத்து மகன் வாசன் கார்த்திக், மறைந்த நடிகர் நாகேஷின் பேரன் கஜேஷ், மற்றும் நடிகர் மயில்சாமி மகன் அன்பு மயில்சாமி ஆகியோர் முக்கிய மகன் அன்பு மயில்சாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, இவர்களுக்கு ஜோடியாக மூன்று இளம் நடிகைகள் நடிக்க உள்ளனர்.
கவுண்டமணிக்கு ஜோடியாக ராஜேஸ்வரி நடிக்கிறார்.
இப்படத்தின் இயக்குநர் சாய் ராஜகோபால் சுமார் 70 படங்களில் கவுண்டமணி மற்றும் செந்திலுக்கான நகைச்சுவை பகுதியை எழுதியதோடு, பல்வேறு படங்களில் உதவி, துணை மற்றும் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
அரசியல் நகைச்சுவை கலந்து உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தை இயக்குநர் சாய் ராஜகோபால் இயக்கியுள்ளார். சினி கிராப்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் ரவிராஜா இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். சித்தார்த் விபின் இசையமைக்கிறார்..
தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பதவியேற்பு விழா என்னும் வாசகத்துடன் ‘மிக விரைவில் பொதுமக்களையும் சந்திக்க உள்ளனர்’ என்று போஸ்டரில் தெரிவித்துள்ளனர்.