அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது மகனிற்கு எதிராக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மதிப்பேன் என தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடனின் மகன் ஹன்டர் பைடன் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் துப்பாக்கியை பயன்படுத்துவது தொடர்பான சட்டங்களை மீறினார் அமெரிக்க நீதிபதியொருவர் தீர்ப்பளித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக பதவிவகிக்கும் ஒருவரின் குடும்ப உறுப்பினர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளமை இதுவே முதல்தடவை.
துப்பாக்கியை கொள்வனவு செய்தவேளை தான் போதைப்பொருள் பாவனையாளர் இல்லை என ஹன்டர் பொய்சொன்னமை தொடர்பில் இரண்டு குற்றச்சாட்டுகளும் போதைப்பொருளிற்கு அடிமையானவேளை துப்பாக்கிகளை வைத்திருந்த ஒரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
2018ம் ஆண்டு கைத்துப்பாக்கியை கொள்வனவு செய்தவேளை அரசாங்க ஆவணத்தில் தான்போதைப்பொருளை பயன்படுத்தவில்லை அதற்கு அடிமையாகவில்லை என ஹன்டர் பைடன் தெரிவித்திருந்தார் ஆனால் அவ்வேளை கொக்கெய்ன் பாவனையால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது பிரதான குற்றச்சாட்டாக காணப்பட்டது.
அமெரிக்க அரசாங்கத்தின் ஏடிஎவ் ஆவணத்தில் பொய்யான தகவல்களை வழங்குவதும் போதைப்பொருளை பயன்படுத்துபவர் துப்பாக்கி வைத்திருப்பதும் அமெரிக்காவில் கடும் குற்றம் இதற்கு 25 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
இந்நிலையில் நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியான பின்னர் டெலாவெயர் வில்மிங்டனிற்கு சென்ற பைடன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள ஹன்டர் பைடனை கட்டித்தழுவியுள்ளார்.
நான் ஜனாதிபதி நான் தந்தையும் கூட நானும் ஜில்லும் மகனை நேசிக்கின்றோம் இன்று அவரின் நிலையை பார்த்து பெருமிதம் கொள்கின்றோம் என தெரிவித்துள்ள பைடன் நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிப்போம் ஹன்டர் மேல்முறையீடு செய்வது குறித்து ஆராய்ந்துவரும் இவ்வேளை நீதிமன்ற செயற்பாடுகளை மதிக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.
தனது மகனிற்கு பொதுமன்னிப்பு வழங்கப்போவதில்லை என பைடன் முன்னர் தெரிவித்திருந்தார்.