நடிகர் ஷாருக்கான், கடைசியாக அட்லி இயக்கிய ‘ஜவான்’ படத்தில் நடித்திருந்தார். வெற்றி பெற்ற இந்தப் படம் ரூ.1100 கோடிக்கு மேல் வசூலித்தது.
அடுத்து சுஜாய் கோஷ் இயக்கும் ‘கிங்’ படத்தில் நடிக்க இருக்கிறார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளருமான இவர், ஐபிஎல் தொடரில் கடந்த மே மாதம் அகமதாபாத்தில் நடந்த கொல்கத்தா அணியின் போட்டியை பார்த்தார்.
அப்போது அவர் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ காரணமாக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மறுநாள் வீடு திரும்பினார். இந்நிலையில் அவருக்கு மீண்டும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அவர் கண் சிகிச்சைக்காக மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு நேற்று முன் தினம் சென்றார்.
ஆனால் திட்டமிட்டபடி அந்த சிகிச்சை நடக்கவில்லை. இதனால் அவர் அமெரிக்கா செல்ல இருக்கிறார். அங்கு சிகிச்சையை மேற்கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.