பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் நீக்கப்படும்

வடகிழக்கில் கடந்தகாலங்களில் இடம்பெற்ற படுகொலைகள் காணாமல்போகச்செய்தல் ஆட்கடத்தல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு நீதியை நிலைநாட்டுவோம் என தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்துள்ளது.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் உள்ளிட்ட அடக்குமுறை சார்ந்த அனைத்து சட்டங்களையும் இல்லாதொழித்து அனைத்து மக்களினதும் சுதந்திரத்தையும் உறுதிசெய்வோம் என தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்துள்ளது.

வடக்குகிழக்கு உள்ளிட்ட நாட்டின் சகல பிரதேசங்களிலும் மக்களது சிவில் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையிலான சிவில் நிர்வாகத்தினை முறைமைப்படுத்தப்படும் எனவும் தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

அனைத்து பிரஜைகளும்தமது மொழியில் சேவைகளை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான தேசிய மொழிக்கொள்கையொன்று உருவாக்கப்படும் என தெரிவித்துள்ள தேசிய மக்கள் சக்தி மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.

சட்டரீதியான அதிகாரங்களைக் கொண்ட பாரபட்சத்திற்கு எதிரான ஆணைக்குழு

ஒன்றினைத் (Commission Against Discrimination) தாபித்தல்.

• வடக்கு கிழக்கு உள்ளிட்ட ஏனைய பிரதேசங்களில் கடந்த காலத்தில் இடம்பெற்ற படுகொலைகள், காணாமல்போகச் செய்வித்தல்கள் மற்றும் ஆட்கடத்தல்கள் பற்றி புலன்விசாரணை மேற்கொண்டு நீதியை நிலைநாட்டுதல்.

• இனவாதம் மற்றும் மதத் தீவிரவாதம் காரணமாக இடம்பெற்றுள்ள வன்முறைச் சம்பவங்களை புலன்விசாரணை செய்வதற்கான உண்மை மற்றும் மீளிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் செயற்பாட்டினை விரிவாக்குதல்.

• மதங்களுக்கிடையிலான மோதல்களை தீர்த்துவைப்பதற்கான அனைத்து மதத் தலைவர்களையும் மதம்சார்ந்த கல்விமான்களினதும் உள்ளடக்கத்துடனான சர்வ மதப் பேரவை ஒன்றைத் தாபித்தல்.

• உலக மதங்கள் பற்றிய சமநிலை வாய்ந்த கல்வி நிகழ்ச்சித்திட்டங்களை அமுலாக்குதல்.

• தேசிய மற்றும் மத ஐக்கியத்திற்கான கலாச்சார நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் செயற்பாடுகளை தேசிய, மாகாண மற்றும் மாவட்ட மட்டத்தில் ஏற்பாடு செய்தல்.

• அரசியல் கைதிகளை விடுதலை செய்தலும் அவர்கள் சுதந்திரமாக சமூகமயமாதலை உறுதிப்படுத்துதல்

செயற்பாடுகள்

• பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை உள்ளிட்ட அடக்குமுறைசார்ந்த அனைத்துச் சட்டங்களையும் இல்லாதொழித்து அனைத்த மக்களினதும் சுதந்திரத்தை உறுதிசெய்தல்.

• வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் சகல பிரதேசங்களிலும் மக்களது சிவில் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையிலான சிவில் நிர்வாகத்தினை முறைமைப்படுத்துதல்.

• கல்வி மற்றும் தொழில் வாய்ப்புக்கள் அரசியல் அழுத்தங்களின்றி சகல இனத்தவர்களுக்கும் நியாயமானவகையில் கிடைக்கக் கூடியதாக தகைமைகளின் அடிப்படையில் பெற்றுக்கொடுப்பதனை உறுதிசெய்தல்.

• மானிய உதவிகள் மற்றும் பாதுகாப்பு அவசியமாகும் யுத்த-விதவைகள், அனாதைகள் மற்றும் மனஅழுத்தங்களுக்கு ஆளானவர்களுக்கான மானிய உதவிகளை பெற்றுக்கொடுத்தல்.

• காணிகள் மற்றும் வாழ்விடங்கள் பற்றிய தேசிய ஆணைக்குழு ஒன்றினூடாக நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணல்.

• இனக் கட்டமைப்பை மாற்றியமைக்கும் குறிக்கோளுடன் மேற்கொள்ளப்படும் மக்கள் குடியேற்றங்களை நிறுத்துதல்.

• அரசியலமைப்பின் 16ஆவது திருத்தத்தின் கீழ் ஏற்றுக்கொள்ளப்பட்ட தேசிய மொழிக் கொள்கையை அவசியமான வளங்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளைப் பெற்றுக் கொடுத்து நடைமுறைப்படுத்துதல்.

• அனைத்துப் பிரஜைகளும் தமது மொழியில் சேவைகளைப் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையிலான தேசிய மொழிக் கொள்கையொன்றை அமுலாக்குதல்.

• தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் கூடுதலாக வாழ்கின்ற வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பொலிஸ் நிலையங்கள், அரசஅலுவலகம் போன்ற சிவில் சேவைகள் நிலவும் இடங்களில் தமிழ் மொழியில் பணிகளை ஆற்றக்கூடியதாக உத்தியோகத்தர்கள், பணியாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்களை

நியமித்தல்.

• 2023. 10. 15 ஆந் திகதி கொண்டதாக தேசிய மக்கள் சக்தி வெளியிட்ட ஹற்றன் பிரகடனத்தில் குறிப்பிட்டவாறு மலையகத் தமிழ் மக்களின் அடையாளத்தையும் உரிமைகளையும் ஏற்றுக்கொண்டு அவர்களின் காணி, வீடமைப்பு, கல்வி, சுகாதாரம் போன்ற வசதிகளை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகளை

மேற்கொள்ளல்.

• மலையக தமிழ் சமுதாயத்தின் சம்பளத்தை வாழ்க்கைச் செலவுக்கு ஏற்று வகையில் அதிகரித்தல். மக்கள் கௌரவமான வருமானத்தினைப் பெறுவதற்குள்ள உரிமையை உறுதிப்படுத்துதல்.

• வடக்கு கிழக்கு உள்ளிட்ட ஏனைய பிரதேசங்களின் கடற்றொழில் நடவடிக்கைகளில் வெளிநாட்டு மீனவர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள சவால்களை இராஜதந்திர ரீதியாக தீர்த்து, அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளையும் விற்பனை வசதிகளுக்கான வாய்ப்புக்களையும் உருவாக்குதல்.

Related posts