‘தி கோட்’ சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு

விஜய்யின் ‘தி கோட்’ படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
செப்.5 மற்றும் செப்.6 ஆகிய இரண்டு நாட்களுக்கு சிறப்புக் காட்சிக்கான அனுமதி கோரப்பட்ட நிலையில், ஒரு நாளுக்கு மட்டும் அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாரணையில், “ஏஜிஎஸ் என்டர்டெயின்ட்மென்ட் தயாரிப்பு நிறுவனம் சார்பில், ‘தி கோட்’ திரைப்படத்துக்கு தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் செப்டம்பர் 5 மற்றும் 6 ஆகிய இரண்டு நாட்களுக்கு சிறப்புக் காட்சிகளை திரையிட அனுமதி கோரப்பட்டது.
அதன் அடிப்படையில், செப்டம்பர் 5-ம் தேதி ஒரு நாள் மட்டும், ஒரு சிறப்புக் காட்சியை தமிழகத்தில் திரையிட அனுமதி அளிக்கப்படுகிறது.
முறையான பாதுகாப்பு வசதிகளுடன் முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கி இறுதி காட்சி இரவு 2 மணி வரை (மொத்தம் 5 காட்சிகள்) திரையிடலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி கோட்: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. இந்தப் படத்தில் சிநேகா, மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், மோகன், பிரபு தேவா, ப்ரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏஜிஎஸ் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. ரூ.400 கோடி பட்ஜெட்டில் படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts