ராஜபக்சர்கள் சீரழித்த நாட்டை மீண்டும் ரணில், அநுர சீரழிக்க முயற்சி – சஜித்

ரணில் விக்கிரமசிங்கவும் அனுர குமார திசநாயக்கவும் புதிய அரசியல் திருமண விருந்து உண்ணுகின்றார்கள். இவர்கள் இருவருக்கும் நாட்டை கட்டி எழுப்ப வேண்டிய தேவை இல்லை. இவர்களில் ஒருவருக்கும் மக்களின் இதயத்துடிப்பு தெரிவதில்லை. 220 இலட்சம் மக்களின் எதிர்பார்ப்பு ஆசை, துன்பம், வேதனை, என்பவற்றையும் அறிவதில்லை.

இவர்களில் மற்றவர் அனைத்தையும் சீரழிக்கின்ற எரியூட்டுகின்ற சமூக படுகொலைகளை முன்னிலைப்படுத்தி செயற்படுகின்றவர். 200 ஆடைத் தொழிற்சாலைகளை உருவாக்குகின்ற பணி முன்னெடுக்கப்பட்ட போது துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து பிரேமதாச உருவாக்கும் ஆடை தொழிற்சாலைகளை தீயிட்டு கொளுத்துவதாக எச்சரிக்கை விடுத்தவர் என்று சஜித் பிரேமதாச எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஹோமாகம நகரில் நேற்று வெள்ளிக்கிழமை (06) மாலை மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட 2024 ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 36 ஆவது மக்கள் வெற்றி பேரணியில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ,

இந்த நாட்டை ராஜபக்சர்கள் சீரழித்து இந்த நாட்டிற்குள் பிளவை ஏற்படுத்திருக்கின்றார்கள். நாட்டை தீயிட்டு கொளுத்துகின்றவர்களுக்கு, கொலைகளை செய்கின்றவர்களுக்கு இந்த நாட்டை கட்டி எழுப்ப முடியாது.

ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அநுரகுமார திசாநாயக்கவிற்கும் ஐக்கிய மக்கள் சக்தி அதிகாரத்திற்கு வந்து நாட்டிற்கு சேவை செய்யும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்தத் தேர்தலில் பிரிகோடு தெளிவாக விளங்குகின்றது. இந்த நாட்டிலுள்ள 220 இலட்சம் மக்களும் ரணில் விக்ரமசிங்கவினதும், அனுரா குமார திசாநாயக்கவினதும் அரசியல் கூட்டை சரியாக விளங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

இவர்கள் இருவரினது நோக்கம் சஜித் பிரேமதாசவை தோல்வி அடையச் செய்வதாகும். அவர்களின் நோக்கம் அப்படி இருந்தாலும், தமதும் ஐக்கிய மக்கள் சக்தியினதும், ஐக்கிய மக்கள் கூட்டணியினதும் பொதுவான நோக்கம் வீழ்ச்சி அடைந்திருக்கின்ற இந்த நாட்டை இந்த மிகப்பெரிய அனர்த்தத்தில் இருந்து மீட்டெடுத்து, சுபிட்சமான நாளைய தினத்திற்காக 2020 இலட்சம் மக்களையும் முன்னெடுத்துச் செல்வது.

அதிகாரம் இல்லாமல் சேவை செய்த ஒரே கட்சி எமது கட்சியே.

76 வருட வரலாற்றுக் காலத்தில் அதிகாரத்தை பயன்படுத்தி மக்களின் வரிப்பணத்திலே மக்களுக்கு சேவை செய்யப்பட்டிருக்கின்றது.

ஐக்கிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு, கடந்த நான்கு வருட காலமாக ஒரு பில்லியன் ரூபா பெறுமதியை இந்த நாட்டின் கல்வி சேவைக்கும் சுகாதார சேவைக்கும் ஒதுக்கி சேவை செய்திருக்கின்றது. நாட்டு மக்களை துன்பத்திலிருந்து மீட்டெடுப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியால் முடியும்.

ஊழலையும் மோசடியையும் திருட்டையும் ஒழித்து திருடர்கள் இந்த நாட்டிலிருந்து திருடிய பணத்தையும் மீளவும் நாட்டுக்குப் பெற்றுக் கொள்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

அனைத்து கொடுக்கல் வாங்கல்களும் முறையாக பேணப்படும்.

அனைத்து கொடுக்கல் வாங்கல்களையும் டிஜிட்டல் முறை ஊடாக அனைவருக்கும் பார்க்க கூடிய வகையில் மேற்கொள்ளப்படும். அனைத்து அரச செலவினங்கள் தொடர்பிலும் தகவல்களை அறிந்து கொள்வதற்கான உரிமையை வழங்குவோம். விலை மனு கோரல் முறையில் இருந்து விலகி செயற்பட மாட்டோம்.

ஜனாதிபதியினதோ அல்லது பிரதமரின் அல்லது அமைச்சர்களினதோ தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப நட்பு வட்டாரங்களுக்கும், நிறுவனங்களுக்கும் சாதகமாக அமைகின்ற வகையில் விலை மனுக் கோரல்கள் இடம்பெறுவதற்கு இடமளிக்க மாட்டோம். ஊழல் இல்லாத சுவர்ணமயமான ஒரு யுகத்தை உருவாக்குவோம்.

பாரிய அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில், மக்களின் வாழ்க்கை நிலை மோசமடைந்திருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில், சுத்தமான ஆட்சி ஒன்றின் ஊடாக 220 இலட்சம் மக்களுக்கும் பொறுப்புக் கூறுகின்ற முறையிலான பொதுமக்களை மையமாகக் கொண்ட அரசாட்சி முறையொன்றை இந்த நாட்டிற்குள் கட்டி எழுப்புவோம் என்றார்.

Related posts