விஜய்க்கு இத்தனை கோடி சம்பளமா?

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள கடைசி திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என கே.வி.என் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. மேலும் இது முழுக்க முழுக்க கமர்ஷியல் பொழுதுபோக்கு படமாக தயராக உள்ளது.

தற்போது, ‘தளபதி 69’ படத்திற்காக விஜய் ரூ. 275 கோடி சம்பளம் வாங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய் இப்படத்திற்காக ரூ. 275 கோடி சம்பளத்துடன் அதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகர் என்ற பெருமையை பெற உள்ளார்.இப்படம் விஜய்யின் கடைசி படம் என்பதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.

‘தளபதி 69’ படத்தை அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு’ ஆகிய படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்க உள்ளார்.

Related posts