2024 பாராளுமன்றத் தேர்தல்; முக்கியமான தகவல்கள்

நாளை (14) இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான முக்கிய தகவல்களை, தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அதற்கமைய, இத்தேர்தலில் ஒரு கோடியே 71 இலட்சத்து 40 ஆயிரத்து 354 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 2024 வாக்காளர் பட்டியலுக்கமைய அது அமைகின்றது.

அத்துடன் இத்தேர்தலில் 8,361 அபேட்சகரர்கள் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.

வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக நாடு முழுவதும் 13,421 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக தகவல்கள் வருமாறு…

வாக்காளர் பதிவு தகவல்

வாக்காளர்களின் எண்ணிக்கை – 17,140,354
(2024 வாக்காளர் பட்டியலின்படி)
குடும்பங்களின் எண்ணிக்கை – 6,476,670
தேர்தல் தொகுதிகளின் எண்ணிக்கை – 13,314
தேர்தல் மாவட்டங்களின் எண்ணிக்கை – 22
நிர்வாக மாவட்டங்களின் எண்ணிக்கை – 25
அரசியல் கட்சிகள்

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை – 83
போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை – 49
வேட்புமனு

தாக்கல் செய்த அரசியல் கட்சிகள் – 408
– அபேட்சகர்களின் எண்ணிக்கை – 5,015
தாக்கல் செய்த சுயேச்சை குழுக்கள் – 282
– அபேட்சகர்களின் எண்ணிக்கை – 3,346
மொத்த கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள் – 690
– மொத்த அபேட்சகர்களின் எண்ணிக்கை – 8,361
தேசியப் பட்டியல் பரிந்துரைகள்
(அரசியலமைப்புச் சட்டத்தின் 99அ பிரிவின்படி)

வழங்கியுள்ள அரசியல் கட்சிகள் 27 (எண்ணிக்கை 516)
வழங்கியுள்ள சுயேச்சை குழுக்கள் 02 (எண்ணிக்கை 11)
மொத்தம் – 527
தெரிவு செய்யப்பட வேண்டிய உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை – 225
அரசியலமைப்பின் 96(4) மற்றும் 98ஆவது பிரிவுகளின்படி – 196
அரசியலமைப்பின் 99(அ) பிரிவின்படி – 29

வாக்குச் சாவடிகளின் விபரம்

ஒரு வரிசை – 6,147
இரண்டு வரிசைகள் – 7,274
மொத்தம் – 13.421
பெண் வாக்காளர்களுக்காக ஒதுக்கப்பட்ட வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை – 107
வாக்குச் சாவடிகளில் பணியமர்த்தப்பட்ட அலுவலர்களின் எண்ணிக்கை – 152,000 (அண்ணளவாக)
வாக்குச் சாவடிகளில் பொலிஸார் எண்ணிக்கை – 27,000 (அண்ணளவாக)
வாக்கு எண்ணும் பணி

வாக்கு எண்ணும் வளாகங்களின் எண்ணிக்கை – 54
எண்ணும் மண்டபங்களின் மொத்த எண்ணிக்கை – 1,582
தபால் வாக்கு எண்ணும் மண்டபங்களின் எண்ணிக்கை – 452
வாக்கு எண்ணும் மண்டபங்களின் மொத்த எண்ணிக்கை – 2,034
முடிவு அறிவிப்பு மையங்களின் எண்ணிக்கை – 22
வாக்கு எண்ணும் மண்டபங்களில் பணியமர்த்தப்பட்ட அலுவலர்களின் எண்ணிக்கை – 80,000 (அண்ணளவாக)
தபால் வாக்கு

தபால் வாக்காளர்களின் எண்ணிக்கை – 737,902
கிடைக்கப் பெற்ற தபால் வாக்கு விண்ணப்பங்கள் – 759,083
அங்கீகரிக்கப்பட்ட தபால் வாக்கு விண்ணப்பங்கள் – 737,902
வாக்குப் பெட்டிகள்

16 1/2 x 13 x 22 – சிறிய வாக்குப் பெட்டிகள் : 7,850
21 x 14 1/2 x 23 – நடுத்தர வாக்குப் பெட்டிகள் : 3,775
24 x 17 x 26 – பெரிய வாக்குப் பெட்டிகள் : 2525

———

நாளை வியாழக்கிழமை (14) நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் பொதுமக்களுக்கு முக்கிய அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தலில் குறிப்பிடப்படுவதாவது,

பொதுத் தேர்தல் தினத்தன்று வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்களிக்கும் சந்தர்ப்பங்களையும், வாக்குச் சீட்டுகளையும் புகைப்படம் எடுத்தல், காணொளி எடுத்தல் அல்லது சமூக ஊடக வலைத்தளங்களில் பதிவிடுதல் என்பன தேர்தல் சட்டங்களை மீறும் செயல்களாகும்.

எனவே, இத்தகைய செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அனைத்து சமூக ஊடக வலைத்தள கணக்குகளின் உரிமையாளர்களுக்கும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்தல் விடுத்துள்ளது.

——–

காலி, பூஸா – வெல்லமட பிரதேசத்தில் வாக்குப் பெட்டிகளை கொண்டு சென்ற பஸ் ஒன்று கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காலி சவுத்லண்ட்ஸ் கல்லூரியில் இருந்து வாக்கெடுப்பு நிலையத்திற்கு வாக்குப் பெட்டிகளை கொண்டு சென்ற பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து இன்று புதன்கிழமை (13) காலை இடம்பெற்றுள்ளது.

விபத்தினையடுத்து பஸ்ஸில் இருந்த வாக்குப் பெட்டிகள் அனைத்தும் வேறொரு வாகனத்திற்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தின் போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

———

நாளை (14) நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கு வாக்களிப்பதற்குத் தேவையான விடுமுறையை தனியார் மற்றும் வங்கித்துறையில் பணிபுரியும் அனைத்து மக்களுக்கும் வழங்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

அனைத்து வாக்காளர்களும் தமது இறையாண்மை அதிகாரத்தை பிரயோகிக்க தமது வாக்கை அடையாளப்படுத்த சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் வாக்குரிமைப் பெற்ற அனைத்து உயர்தரப் பாடசாலை மாணவர்களுக்கும் தமது வாக்குகளைப் பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமெனவும் அது தொடர்பில் மேலதிக வகுப்புகளின் ஆசிரியர்கள் அக்கறையுடன் செயற்பட வேண்டுமெனவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

அத தெரணவிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

“நாளைய பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்குகளைக் அளிக்கும் அனைத்து தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் வங்கித் துறையிலும் பணிபுரியும் ஊழியங்களுக்கு விடுமுறை வழங்குமாறு கோரப்படுகிறது.

தயவு செய்து தங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் தங்கள் இறையாண்மை அதிகாரத்தைப் பயன்படுத்தி வாக்குகளை அளிக்க அனுமதிக்கவும்.

தூரத்திற்கு ஏற்ப விடுமுறை வழங்குவது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது”என்றார்.

மேலதிக விபரம் மேலே..

Related posts