அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படம் மொத்தமாக செய்த மாஸ் கலெக்ஷன்.

புஷ்பா 2, இந்திய சினிமா ரசிகர்கள் கடந்த வருடம் எதிர்ப்பார்த்த படங்களில் முக்கியமானவை.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா நடிப்பில் உருவான இப்படம் கடந்த வருடம் டிசம்பர் 5ம் தேதி வெளியானது.

படத்தை ரசிகர்கள் முதல் நாளே பெரிய அளவில் கொண்டாட புஷ்பா 2 படக்குழுவினருக்கு சோகத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு அசம்பாவிதம் நடந்துவிட்டது.

தற்போது அதற்கான பிரச்சனையில் அல்லு அர்ஜுன் சிக்கியிருப்பது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

பிரச்சனை ஒருபக்கம் இருக்க பாக்ஸ் ஆபிஸில் படம் செம வசூல் வேட்டை நடத்தி வருகிறது. படம் வெளியாகி 32 நாள் முடிவில் புஷ்பா 2 படம் மொத்தமாக ரூ. 1831 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது.

விரைவில் படம் ரூ. 2000 கோடியை எட்டிவிடும் என கூறப்படுகிறது.

Related posts