மதகஜராஜாவுக்கு இவ்வளவு வரவேற்பு ஒரு அதிசயம்’ – விஷால்

12 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகி உள்ள மதகஜராஜா திரைப்படம் இவ்வளவு வரவேற்பைப் பெறுவது ஒரு அதிசயம் தான் என்று விஷால் தெரிவித்துள்ளார்.

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘மதகஜராஜா’. 12 ஆண்டுகளுக்குப் பிறகு பல்வேறு பிரச்சினைகளை கடந்து வெளியாகியுள்ளது.

அனைத்து படங்களையும் கடந்து மக்கள் மத்தியில் ‘மதகஜராஜா’ வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த வரவேற்பு குறித்து விஷால் தனது எக்ஸ் தளத்தில் “‘மதகஜராஜா’ திரையரங்குகளில் வெளியாகி மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துள்ளது.

என்ன ஒரு வரவேற்பு, இதற்கு மேல் என்ன தேவை. அனைத்து திரையரங்குகளிலும் பெரும் வரவேற்பு.

திரையரங்கம் முழுக்க கூட்டத்தைப் பார்ப்பது ஒரு நடிகரை இன்னும் கடினமாக உழைக்க வைக்கிறது.

என் அன்பான ரசிகர்களுக்கும், மக்களுக்கும் நன்றி. குடும்பமாக ஒரு படத்தைப் பார்க்க வருவது ஒரு நேர்மறையான விஷயம்.

நன்றி சுந்தர் சார். இந்த தருணத்துக்காக ஒவ்வொரு வருடமும் காத்திருந்தேன்.

சோழ பரம்பரையில் இன்னொரு எம்.எல்.ஏ. 12 வருடங்களுக்குப் பிறகு ஒரு படம் வெளியாகி இவ்வளவு வரவேற்பைப் பெறுவது ஒரு அதிசயம் தான்.” என்று தெரிவித்துள்ளார் விஷால்.

‘மதகஜராஜா’ படத்தைத் தொடர்ந்து, விஷால் தயாரித்து இயக்கவுள்ள ‘துப்பறிவாளன் 2’ படத்தில் கவனம் செலுத்தவுள்ளார்.

தனது உடல்நிலை முழுமையாக குணமானவுடன் இதன் முதற்கட்டப் பணிகளைத் தொடங்கவுள்ளார்.

Related posts