பிப்ரவரி 6-ம் தேதி ‘விடாமுயற்சி’ படத்தினை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.
இன்று (ஜன.16) மாலை ‘விடாமுயற்சி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகவுள்ளது.
இத்துடன் படத்தின் வெளியீட்டு தேதியும் இருக்கும் என கூறப்படுகிறது.
இது குறித்து விசாரித்த போது, பிப்ரவரி 6-ம் தேதி படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.
இந்த தேதியினை அனைத்து விநியோகஸ்தர்களிடமும் தெரிவித்துள்ளது படக்குழு.
விடாமுயற்சி’ ட்ரெய்லருக்காக அஜித் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.
இப்படக்குழுவினருக்கும் ஹாலிவுட் நிறுவனத்துக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவு பெற்றுள்ளது.
இப்பேச்சுவார்த்தையின் முடிவில் வரவேண்டிய இ-மெயிலும் லைகா நிறுவனத்துக்கு வந்துவிட்டதாக கூறப்படுகிறது.
லைகா நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘விடாமுயற்சி’.
அஜித், அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார்.
இப்படம் ஹாலிவுட் படமான ‘ப்ரேக் டவுன்’ படத்தின் தழுவல் என்பது நினைவுக் கூரத்தக்கது.