வழங்கிய வாக்குறுதிக்கு அமைய ஊழல் அரசியல் ஒழிக்கப்படும்

மக்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு அமைய, ஊழல் நிறைந்த அரசியலை ஒழிக்க பாடுபடுவேன் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

களுத்துறை, கட்டுகுருந்த பகுதியில் இன்று (19) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

களுத்துறை, கட்டுகுருந்த, வெட்டுமகட பாகிஸ்தான் விளையாட்டு மைதானத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற நட்புறவு சந்திப்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்து கொண்டார்.

“நாங்கள் நவம்பர் 21 ஆம் தேதி அமைச்சரவையில் 21 அமைச்சர்களுடன் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டோம்.

இராஜாங்க அமைச்சர்கள் இல்லை, கடந்த காலத்தில், களுத்துறையில் அமைச்சுப் பதவிகள் பேராசை கொண்டவையாக இருந்தன.

எங்களிடம் களுத்துறையில் 8 பாராளுமன்ற உறுப்பினர்களும் 1 அமைச்சரும் உள்ளனர்.

ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதன் குறிக்கோள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சலுகைகள் வழங்குவது அல்ல.

கடந்த காலத்தில் அப்படிச் செய்யப்படவில்லை. அப்படிப்பட்ட அரசாங்கத்தை எங்களால் மட்டுமே உருவாக்க முடியும், வேறு யாராலும் முடியாது.

முன்பு அமைச்சர் பதவிகள் பொதுவாக எவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்டன? இந்த அமைச்சர் பதவிகள் உறவினர்களிடையே பகிர்ந்து கொள்ளப்பட்டன.

முன்பு அமைசுக்களில் ஊழியர்களாக யார் சேர்க்கப்பட்டனர்? மனைவி பிரத்தியேக செயலாளராகவும், குடுப்பத்தினருக்கு பதவிகள் வழங்கப்பட்டன.

இந்த நிலை இப்போது மாற்றப்பட்டுள்ளது.

இன்று, எந்த அமைச்சரையும் பின்தொடர்ந்து வாகனங்களோ அல்லது பொலிஸ் உத்தியோகத்தர்களோ இல்லை.

அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல, எதிர்க்கட்சியினருக்கும் கூட இல்லை.

ஏனென்றால் பொலிஸ் துறைக்கு 21,000 போதாது. அவர்கள் மிகவும் கடினமாக உழைக்கிறார்கள்.

Related posts