தனுஷ் இயக்கத்தை புகழ்ந்து தள்ளிய எஸ்.ஜே.சூர்யா!

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படம் பார்த்துவிட்டு தனுஷுக்கு புகழாரம் சூட்டியிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.

பிப்ரவரி 7-ம் தேதி வெளியாக இருந்த ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படம் பிப்ரவரி 21-ம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தைப் பார்த்துவிட்டு ரெட் ஜெயன்ட் நிறுவனம், மிகவும் நன்றாக இருப்பதாக தனியாக வரலாமே என்று தேதியை மாற்றி இருப்பதாக திரையுலகினர் தெரிவித்து வருகிறார்கள்.

தற்போது இப்படத்தை தனுஷ் தனக்கு நெருங்கிய நண்பரான எஸ்.ஜே.சூர்யாவுக்கு திரையிட்டு காட்டியிருக்கிறார்.

‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ குறித்து எஸ்.ஜே.சூர்யா, “ஹாலிவுட் நடிகர் இயக்குநர் தனுஷ் சார் இயக்கியுள்ள ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. என்ன ஒரு பொழுதுபோக்கான, இளம் ஜென்சி, நகைச்சுவையான, உணர்ச்சிமிக்க, அதே வேளையில் தனித்துவமான படம்.

சார் ஒரு கேள்வி. எப்படி இவ்வளவு பிஸியான நேரத்திலும் ‘ராயன்’ படத்துக்குப் பிறகு இப்படியொரு படத்தை உருவாக்கினீர்கள்? என்ன ஓர் இயக்கம்! இப்படத்தில் அறிமுகமாகும் அனைத்து இளம் நடிகர்கள், நடிகைகள் அனைவரும் வாழ்த்துகள்.

உங்கள் அனைவருடைய நடிப்பும் அருமை” என்று தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு பிறகு எஸ்.ஜே.சூர்யாவும் படத்தினை பாராட்டி கருத்து தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும், இப்படத்தின் பாடல்களுக்கும் இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் தயாரித்து, இயக்கியுள்ள இப்படத்தில் பாவிஷ், அனைகா சுரேந்திரன், ப்ரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார்.

Related posts