திருமண தேதியை அறிவித்த அமீர் – பாவ்னி ஜோடி

தங்களுடைய திருமண தேதியை அறிவித்துள்ளது ‘பிக்பாஸ்’ மூலம் பிரபலமான அமீர்- பாவ்னி ஜோடி.

பிக்பாஸ் சீசன் 5-ல் பிரபலமான ஜோடி அமீர் – பாவ்னி.

இருவருமே பிக் பாஸ் போட்டியில் பங்கேற்றதன் மூலம் நட்பாகி காதலித்து வந்தார்கள்.

சமூக வலைதளத்தில் தொடர்ச்சியாக இருவரும் ஒன்றாக புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியிட்டு வந்தார்கள்.

3 ஆண்டுகளாக திருமணம் செய்யாமலேயே ஒன்றாக வாழ்ந்து வந்தார்கள்.

தற்போது ஏப்ரல் 20-ம் தேதி அமீர் – பாவ்னி திருமணம் நடைபெறவுள்ளது.

இதனை ஒன்றாக வீடியோ பதிவொன்றின் மூலம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதற்கு இவர்களுடைய நண்பர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்த ஜோடி அஜித் நடித்த ‘துணிவு’ படத்தில் ஒன்றாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts