2026-ம் ஆண்டு பொங்கல் வெளியீட்டுக்கு திட்டமிடப்படுகிறது சிவகாரத்திகேயனின் ‘பராசக்தி’ திரைப்படம்.
இலங்கையில் பல்வேறு பகுதிகளில் ‘பராசக்தி’ படத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
அங்குள்ள பகுதிகள் பழங்காலம் போல் இருப்பதால் அங்கு படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள்.
அதன் படப்பிடிப்பு புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. இதனை கட்டுப்படுத்தி வருகிறது படக்குழு.
தற்போது இப்படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிடலாம் என்ற முனைப்பில் இருக்கிறது படக்குழு.
அதற்கு தகுந்தாற் போன்று படப்பிடிப்பை முடித்து, இறுதிகட்டப் பணிகளைத் தொடங்கவுள்ளார்கள்.
இலங்கை படப்பிடிப்பை முடித்துவிட்டு, சென்னையிலும் அரங்குகள் அமைத்து சில முக்கிய காட்சிகளை படமாக்கவுள்ளார்கள்.
டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘பராசக்தி’.
சுதா கொங்காரா இயக்கி வரும் இப்படத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், பாசில் ஜோசப், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்து வருகிறார்.
இது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் 25-வது படமாகும். இதில் ரவி மோகன் வில்லனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ ரிலீஸ் அப்டேட்
