கொலை செய்யுமாறு உத்தரவிட்டவர் சவேந்திர டி சில்வா

சவேந்திர சில்வா தனிநபரின் வாழ்வதற்கான உரிமை , சித்திரவதைக்கு உட்படுத்தப்படாமலிருப்பதற்கான உரிமை, ஈவிரக்கமற்ற,அல்லது மனிதாபிமானற்ற விதத்தில் நடத்தப்படாமலிருப்பதற்கான,இழிவான விதத்தில் நடத்தப்படாமலிருப்பதற்கான,அல்லது தண்டிக்கப்படாமலிருப்பதற்கான உரிமையை பாரதூரமாக மீறும் நடவடிக்கைகளிற்கு காரணமாக இருந்துள்ளார் , இருக்கின்றார் என்ற அடிப்படையில். உலகளாவிய மனித உரிமைகள் தடைகள் 2020 இன் அர்த்தங்களுடன் சவேந்திர சில்வா சம்பந்தப்பட்ட நபராகும்.

சவேந்திர சில்வா இலங்கை இராணுவத்தின் 58வது பிரிவின் தளபதியாக செயற்பட்டார், இக்காலப்பகுதியி;ல் 58வது படைப்பிரிவினர் சட்டவிரோத படுகொலைகள், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதுடன்,சித்திரவதை,ஈவிரக்கமற்ற நடவடிக்கைகள், கீழ்த்தரமான நடவடிக்கைகள் தண்டனைகளை வழங்குதல் போன்றவற்றில் ஈடுபட்டனர்.

சரணடையும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்களை கொலை செய்யவேண்டும் என உத்தரவிட்ட சவேந்திர சில்வா சரணடைந்த விடுதலைப்புலிகளை தனது படையினர் சுட்டுக்கொன்றவேளை போர் முன்னரங்கிலேயே காணப்பட்டார்.

——–

ஜகத் ஜெயசூரிய

ஜெயசூரிய தனிநபரின் வாழ்வதற்கான உரிமை , சித்திரவதைக்கு உட்படுத்தப்படாமலிருப்பதற்கான உரிமை, ஈவிரக்கமற்ற,அல்லது மனிதாபிமானற்ற விதத்தில் நடத்தப்படாமலிருப்பதற்கான,இழிவான விதத்தில் நடத்தப்படாமலிருப்பதற்கான,அல்லது தண்டிக்கப்படாமலிருப்பதற்கான உரிமையை பாரதூரமாக மீறும் நடவடிக்கைகளிற்கு காரணமாக இருந்துள்ளார் , இருக்கின்றார் என்ற அடிப்படையில். உலகளாவிய மனித உரிமைகள் தடைகள் 2020 இன் அர்த்தங்களுடன் ஜெயசூரிய சம்பந்தப்பட்ட நபராகும்.

விசேடமாக ஜகத் ஜெயசூரிய 2007 முதல் 2009 வரை வன்னியில் நடவடிக்கைகளில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினரின் தளபதியாக விளங்கினார்.

இக்காலப்பகுதியில் அவரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த இலங்கை இராணுவத்தினர்,சட்டவிரோத படுகொலைகள்,சித்திரவதை ஈவிரக்கமற்ற நடவடிக்கைகள் கீழ்த்தரமான நடவடிக்கைகள் தண்டனைகளை வழங்குதல் போன்றவற்றில் ஈடுபட்டனர்.

——-

வசந்த கரணாகொட

தனிநபரின் வாழ்வதற்கான உரிமை , சித்திரவதைக்கு உட்படுத்தப்படாமலிருப்பதற்கான உரிமை, ஈவிரக்கமற்ற,அல்லது மனிதாபிமானற்ற விதத்தில் நடத்தப்படாமலிருப்பதற்கான,இழிவான விதத்தில் நடத்தப்படாமலிருப்பதற்கான,அல்லது தண்டிக்கப்படாமலிருப்பதற்கான உரிமையை பாரதூரமாக மீறும் நடவடிக்கைகளிற்கு காரணமாக இருந்துள்ளார் , இருக்கின்றார் என்ற அடிப்படையில். உலகளாவிய மனித உரிமைகள் தடைகள் 2020 இன் அர்த்தங்களுடன் கரணாகொட சம்பந்தப்பட்ட நபராகும்.

2005 முதல் 2009 வரை இலங்கை கடற்படையின் தளபதியாக வசந்த கரணாகொட பதவி வகித்தார்.

இக்காலப்பகுதியில் இலங்கை கடற்படையினர் வசந்த கரணாகொடவின் கட்டளைப்பொறுப்பின் கீழ் சட்டவிரோத படுகொலைகள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதுடன்,சித்திரவதை,ஈவிரக்கமற்ற நடவடிக்கைகள், கீழ்த்தரமான நடவடிக்கைகள் தண்டனைகளை வழங்குதல் போன்றவற்றில் ஈடுபட்டனர்.

Related posts