பத்தொன்பது வயதில் கைதுசெய்யப்பட்ட சிவகுமார் பார்த்தீபன் என்ற இருவர் ,முப்பது வருடங்கள் கடந்தும் இன்று 50 வருடங்கள் ஆகியும் விடுதலையடைய முடியாமல் சிறையில் உள்ளனர் என தெரிவித்துள்ள மக்கள் போராட்ட முன்னணியின் ராஜ்குமார் ரஜீவ்காந் ஆனால் அரசியல் கைதிகள் விடுதலை குறித்து வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் என்பிபி தோழர்கள் பொய்யான வாக்குறுதிகளுடன்மீண்டும் தேர்தலிற்காக களத்தில் குதித்துள்ளனர் என தெரிவித்துள்ளார்
மகசின் சிறைச்சாலைக்கு சென்று தமிழ்அரசியல்கைதிகள் சிலரை பார்த்த பின்னர் கருத்து தெரிவிக்கையில்இதனை குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
என்பிபி அரசாங்கம் ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் வந்துஆறுமாதங்களிற்கு மேல் ஆகிவிட்டது,இந்த ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் அவர்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடாக மக்களிற்கு சில உறுதிமொழிகளை வழங்கியிருந்தார்கள்.
அதில் நாங்கள் தொடர்ச்சியாக வேலை செய்துகொண்டிருக்கும் அரசியல் கைதிகளின் விடுதலை மிகவும் முக்கியமானது ஒன்று.
இந்த அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ,தொடர்ச்சியாக நாங்கள் போராடிக்கொண்டிருக்கின்றோம். இந்த நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக அரசியல் கைதிகள் பல்வேறு ஆண்டுகளாக சிறையில் வாடிக்கொண்டிருக்கின்றனர்,இன்று 30 ஆண்டுகளிற்கு மேல் இந்த சிறைச்சாலைக்குள் பல அரசியல் கைதிகள் உள்ளனர்,
நான் அவர்களில் ஒரு சிலரை பார்ப்பதற்காக இங்கு வந்தேன். கிட்டத்தட்ட 19 வயதில் கைதுசெய்யப்பட்ட, பத்தொன்பது வயதில் கைதுசெய்யப்பட்ட சிவகுமார் பார்த்தீபன் என்ற இருவர் ,முப்பது வருடங்கள் கடந்தும் இன்று 50 வருடங்கள் ஆகியும் விடுதலையடைய முடியாமல் சிறையில் உள்ளனர்.
இவர்களின் விடுதலை தொடர்பாக விஜித ஹேரத் அவர்களிடம் ஒக்டோபர் மாதம் நான்,வலியுறுத்தியிருந்தேன் அதற்கு பதிலளித்த அவர் விடுதலை இடம்பெறுகின்றது அதற்கான வேலைகள் இடம்பெறும் என தெரிவித்திருந்தார்.
அதற்கு பின்னர் பிரதியமைச்சர் ஒருவரின் ஊடாக ஹர்சநாணயக்கார அவர்களிற்கு எடுத்துக்கூறியிருந்தேன்.அதற்குரிய பதில் எனக்கு கிடைக்கவில்லை.
அதன் பின்னர் பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கு பல்வேறு தகவல்களை அனுப்பியிருந்தேன்,செய்திகளை அனுப்பியிருந்தேன், எத்தனையோ ஊடக சந்திப்புகள் ஊடாக அரசியல் கைதிகள் தொடர்பாக,அவர்களின் கஷ்டங்கள், ஏற்கனவே வழங்கப்பட்ட வாக்குறுதி,மக்கள் ஆணை கிடைத்திருக்கின்றது அவர்களின் விடுதலை என்பது காலத்தின் கட்டாயம் என்பதை தொடர்ச்சியாக எடுத்துக்கூறிக்கொண்டிருக்கின்றோம்.
ஆனால் இன்றுவரை இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மீண்டும் என்பிபி தோழர்கள் பொய்யான வாக்குறுதிகளுடன் தேர்தலிற்காக களத்தில் குதித்துள்ளனர்.
இவர்களிற்கு முதுகெலும்பு இருந்தால் அரசியல்கைதிகளின் விடுதலையின் பின்னர் இவர்கள் இந்த தேர்தலை எதிர்கொள்ளவேண்டும்.
தொடர்ந்து தமிழ் மக்களை ஏமாற்றிக்கொண்டு பொய்யான வாக்குறுதிகளை வழங்கிக்கொண்டிராமல் இந்த சித்திரவதையை இத்துடன் நிறுத்தி அவர்கள் வாழ்வதற்கு அனுமதிக்கவேண்டும்.
இதற்கு முன்னர் விடுதலையான எந்தவொரு அரசியல் கைதியும் இந்த சமூகத்திலே எந்தவொரு பிழையான நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை.
பொய்யான வாக்குறுதிகளை வழங்கிக்கொண்டு அரசியல் இலாபம் தேடும் நோக்கிலே இந்த அரசாங்கம் நகரக்கூடாது.
அவர்களின் விடுதலைக்கு எந்த காரணமும் தடையாகயிருக்க வாய்ப்பில்லை, ஏனென்றால் இரண்டு வருடங்களிற்கு முன்னர் நாற்பத்தெட்டு பேர் இருந்தனர்,38 பேரின் விடுதலை இடம்பெற்றுள்ளது அதேபோல மிகுதி பத்துபேரின், விடுதலை நிச்சயமாக இடம்பெறக்கூடிய ஒன்றுதான்,
ஏனென்றால் அனைத்து அதிகாரங்களும் கொண்ட ஜனாதிபதியினால் அவர்களிற்கான பொதுமன்னிப்பை வழங்க முடியும்,சட்டமா அதிபர்அவர்களிற்கு எதிரான வழக்குகளை தள்ளுபடிசெய்து அவர்களை விடுதலை செய்யலாம்.ஏனென்றால் போதுமான வாக்குமூலங்கள் கிடையாது , சிங்களத்தில் பதியப்பட்ட வாக்குமூலங்களை அடிப்படையாக கொண்டுதண்டனை வழங்கப்பட்டுள்ளது,
தண்டனையாகயிருந்தால் கூட அவர்கள் இரண்டு ஆயுள்தண்டனையை அவர்கள் எதிர்நோக்கி முடித்திருக்கின்றார்கள்.