எங்கள் வாழ்க்கை முடிவுக்கு வரும் தருணம்…

கடவுளாக நினைக்கும் நாளில், எங்கள் வாழ்க்கை முடிந்துவிடும்” என்று சல்மான் கான் கூறியுள்ளார்.

சல்மான் கான் அளித்த பேட்டியொன்றில் சூப்பர் ஸ்டார் குறித்த பேச்சுக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

அதில், “ரஜினி, சிரஞ்சீவி, விஜய், விக்ரம், சூர்யா போன்ற நடிகர்கள் ஒரு சூப்பர் ஸ்டாருடன் பணிபுரிவது போன்ற உணர்வை ஒரு போதும் தரமாட்டார்கள்.

மக்கள்தான் எங்களை இந்த நிலைக்கு கொண்டு வந்துவிட்டார்கள். நாங்கள் கடவுளாக நினைக்கும் நாளில் எங்களுடைய வாழ்க்கை முடிந்துவிடும்.” என்று தெரிவித்துள்ளார் சல்மான்கான்.

இந்தப் பேச்சுக்கு ரசிகர்கள் பலரும் வரவேற்பு அளித்திருக்கிறார்கள். இந்த வீடியோ பதிவு இணையத்தில் ட்ரெண்ட்டாகி வருகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான், ராஷ்மிகா மந்தனா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘சிக்கந்தர்’.

சஜித் நாடியவாலா தயாரித்துள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார்.

Related posts