‘துருவ நட்சத்திரம்’ படத்தின் வெளியீடுக்கு தானும் காத்திருப்பதாக நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார்.
‘வீர தீர சூரன் 2’ படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பால், விக்ரம் மற்றும் படக்குழுவினர் தமிழகம் முழுக்க திரையரங்குகளுக்கு சென்று பார்வையாளர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்கள்.
அதேபோல படமும் நாளுக்கு நாள் வசூல் அதிகரித்து வருகிறது. சேலம் திரையரங்கம் ஒன்றில் விக்ரம் கலந்துக் கொண்ட போது ‘துருவ நட்சத்திரம்’ வெளியீடு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு விக்ரம், “கவுதம் மேனனிடம் கேட்டுச் சொல்கிறேன்” என பதிலளித்தார் விக்ரம்.
பின்பு “ரொம்ப நாளாக காத்திருக்கிறோம்” என்று பார்வையாளர் ஒருவர் கேட்க, “நானும்தான்!” என பதிலளித்துள்ளார் விக்ரம். இந்த வீடியோ பதிவு இணையத்தில் வெளியாகியுள்ளது.
அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், துஷாரா விஜயன்.
எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சுரமுடு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘வீர தீர சூரன் 2’.
ஷிபு தமீன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தினை ஃபைவ் ஸ்டார் செந்தில் வெளியிட்டுள்ளார்.