நானியின் ‘தி பாரடைஸ்’ வதந்திகள்

‘தி பாரடைஸ்’ படம் குறித்து வெளியாகியுள்ள வதந்திகளுக்கு படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான ‘தி பாரடைஸ்’ படத்தின் அறிமுக டீசருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

ஆனால், இதன் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது தெரியாமல் உள்ளது.

இதனை முன்வைத்து பல்வேறு வதந்திகள் இணையத்தில் வெளியாகின.

படக்குழுவினரிடம் போதிய நிதியில்லை, நானி இறுதி கதையில் நிறைய மாற்றங்கள் கூறியிருக்கிறார் என பல்வேறு தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இது தொடர்பாக படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர். அதில் “‘தி பாரடைஸ்’ அனைத்து வழிகளிலும் மேம்பட்டுக் கொண்டிருக்கிறது.

எல்லாம் சரியான பாதையில் சென்றுக் கொண்டிருக்கின்றன. நீங்கள் அனைவரும் விரைவில் அதைக் காண்பீர்கள்.

இதற்கிடையில் உங்களால் முடிந்தவரை எங்களுக்கு தீனி போட்டுக் கொண்டே இருங்கள்.

அனைத்து அன்பையும் உள்வாங்கிக் கொள்ளும் அதேவேளையில், எங்களுக்கு எதிராக வரும் அனைத்து அடிப்படையற்ற வெறுப்பையும் கவனித்து வருகிறோம்.

அன்பையும், வெறுப்பையும் எடுத்துக் கொண்டு ‘தி பாரடைஸ்’ படத்தை தெலுங்கு திரையுலகில் இருந்து வெளிவரும் சிறந்த படங்களில் ஒன்றாக மாற்றுவோம்.

எங்களுக்காக வேரூன்றி இருக்கும் அனைவருக்கும், அனைத்து துறைகளும் உங்கள் அனைவருக்கும் ஒரு புதிய உலகத்தைக் கொண்டுவர முழு வீச்சில் உழைத்து வருகின்றன.

அனைவரும் பெருமைப்படும் ஒரு சினிமாவை உருவாக்குவோம்” என்று தெரிவித்துள்ளது படக்குழு.

Related posts