இயக்குநர் அட்லி – நடிகர் அல்லு அர்ஜுன் கூட்டணி படத்தில் நாயகியாக நடிக்க நடிகை பிரியங்கா சோப்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
‘புஷ்பா 2’ படத்துக்குப் பிறகு அட்லி இயக்கத்தில் உருவாகும் படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படம் குறித்த அறிவிப்பு ஏப்ரல் 8-ம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இதனிடையே, இப்படத்தில் நாயகியாக நடிக்க பிரியங்கா சோப்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள்.
இன்னும் படப்பிடிப்பு தேதிகள் முடிவாகாத காரணத்தினால் ஒப்பந்தம் கையெழுத்திடப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
ஏப்ரல் 8-ம் தேதி அறிவிப்பில் பிரியங்கா சோப்ரா அறிவிப்பு இருக்குமா என்பது இன்னும் உறுதியாகவில்லை.
அக்டோபர் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது.
இதன் இதர நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு ஆகியவை மும்முரமாக நடைபெற்று வருகின்றன.