சீமான், ஆர்.கே.சுரேஷ் இணையும் படத் தலைப்பு ‘தர்மயுத்தம்’

சீமான், ஆர்.கே.சுரேஷ் இணைந்து நடித்துள்ள படத்துக்கு ‘தர்மயுத்தம்’ எனப் பெயரிட்டுள்ளார்கள்.
சீமான், ஆர்.கே.சுரேஷ், அனு சித்தாரா இணைந்து புதிய படமொன்றில் நடித்து வந்தார்கள். இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வந்தது. தற்போது இதன் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
தற்போது இப்படத்துக்கு ‘தர்மயுத்தம்’ எனத் தலைப்பிட்டுள்ளனர். இதற்காக ரஜினி நடித்த ‘தர்மயுத்தம்’ படத்தின் தயாரிப்பாளரிடம் தடையில்லா சான்றிதழ் வாங்கியிருப்பதாக தெரிகிறது. இப்படத்தினை ஆதம் பாவா மற்றும் இரா.க.சிவகுமார் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இதில் இளவரசு, எம்.எஸ்.பாஸ்கர், வெற்றிக் குமரன் , சாட்டை துரைமுருகன், ஜெயக்குமார், ஆதிரா பாண்டியலட்சுமி, சௌந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதன் ஒளிப்பதிவாளராக செழியன், இசையமைப்பாளராக விஷால் சந்திரசேகர் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
ஒரு கொலையின் பின்னணி மர்மங்கள், அது தொடர்பான சம்பவங்கள் என இன்வெஸ்டிகேஷன் க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தை இரா.சுப்ரமணியன் எழுதி இயக்கியிருக்கிறார். தென்காசி,குற்றாலம், திண்டுக்கல் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம, நகர்ப்புறங்களிலும் இப்படத்தினை படமாக்கி இருக்கிறார்கள்.

Related posts