முதலில் கெட்ட வார்த்தைகளை தான் கற்றுக்கொண்டேன்

நடிக்க வந்தபோது, தமிழில் முதலில் கெட்ட வார்த்தைகளை தான் கற்றுக்கொண்டேன் என நடிகை நமீதா கூறி உள்ளார்.

திரைப்படங்களில் நடிக்க வந்தபோது, தமிழ் மொழியைக் கற்ற அனுபவங்களை கலகலப்பாக நடிகை நமீதா பகிர்ந்து கொண்டார்.

சினிமாவில் குழு நடனம் ஆடும் கலைஞர்களின் வாழ்க்கை பற்றி கூத்தன் என்ற படம் உருவாகி உள்ளது. ராஜ்குமார் கதாநாயகனாக நடித்து இருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நமீதா பேசும்போது ‘மேலாளர் மனோஜ் தான் நான் இங்கு வரக்காரணம். என் வாழ்க்கையில் கொஞ்சம் வெற்றிவரக்காரணம் அவர் தான். அவர் தான் தமிழில் பேசுங்கள் என்று உற்சாகப்படுத்தினார்.

மச்சான் வார்த்தை உருவானது அப்படித்தான். ராஜ்குமார் மனோஜ் மூலம் அறிமுகமாகிறார். கண்டிப்பாக வெற்றி அடைவார். தண்ணியில் குதித்து விட்டதால் நீச்சல் கற்றுக் கொள்ளுங்கள். திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள்’ என்றார்.

திரைப்படங்களில் நடிக்க வந்தபோது, தமிழில் முதலில் கெட்ட வார்த்தைகளை தான் கற்றுக்கொண்டேன் இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

Leave a Comment


The reCAPTCHA verification period has expired. Please reload the page.