சிறீலங்கா அரசியல் மாற்றம் தற்போதய நிலவரங்கள் பல..

நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றதன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ கொழும்பு, கங்காராம விஹாரையில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் விஜயராம மாவத்தையில் உள்ள அவரது இல்லத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இந் நிலையில் மஹிந்தவின் வருகையை எதிர்ப்பார்த்து வாழ்த்துக்களை தெரிவிப்பதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்ட ஏனையோர் விஜயராம மாவத்தை வளாகத்தில் காத்துக் கொண்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

—————

புதிய பிரதமராக பதவியேற்றுள்ள மகிந்த ராஜபக்சவிற்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பெரும் பெருமிதத்துடனும் மகிழ்ச்சியுடனும் நான் புதிய பிரதமரை வாழ்த்துகின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் தற்போது ஒன்றிணைந்து மீண்டும் ஸ்திரதன்மை வாய்ந்த முன்னேற்றகரமான தேசத்தை கட்டி யெழுப்புவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

——————

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க காலியில் இருந்து தற்போது அலரிமாளிகை வந்தடைந்துள்ளார்.இன்னும் சற்று நேரத்தில் விசேட சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றுள்ள பரபரப்பான சூழ்நிலையில் அலரிமாளிகையில் ஐக்கியதேசிய கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களின் விசேட கூட்டமொன்றுக்காக கூடியுள்ளனர்.

—————-

நாட்டின் பிரதமர் தொடர்ந்தும் நானே என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் சற்று முன்னர் இடம்பெற்ற விடயங்கள் சட்டவிரோதமானவை அரசியலமைப்பிற்கு முரணானவை என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

—————

மஹிந்த ராஜபக்ஷ இலங்கையின் பிரதமராக பதவியேற்றுள்ள பரபரப்பான சூழ்நிலையில் அலரிமாளிகையில் ஐக்கியதேசிய கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களின் விசேட கூட்டமொன்று இடம்பெறவுள்ளது.அலரிமாளிகையை நோக்கி ஐக்கியதேசிய கட்சியின்பாராளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்கள் விரைவதை காணமுடிகின்றது.

—————-

நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகித்த 3 முக்கிய கட்சிகள் முக்கிய பேச்சுவார்த்தையில் இடம்பெற்றுள்ளன.

அந்த வகையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய சிறுபான்மைக் கட்சிகள் இந்த முக்கிய பேச்சுவார்த்தையில் தனித்தனியாக ஈடுபட்டுள்ளன.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை அடுத்து எவ்வாறு முங்கொடுப்பது தொடர்பான பேச்சில் 3 கட்சிகளும் ஈடுபட்டுள்ளன.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் 5 உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் 7 உறுப்பினர்களும் தமிழ் முற்போக்கு கூட்டணியில் 6 உறுப்பினர்களும் நல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பெற்றிருந்தனர்.

இந் நிலையில் அமைச்சர் மனோகணேசன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

—————

இலங்கையில் அரசமைப்பு நெருக்கடியொன்று உருவாகலாம் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிப்பதாக இந்தியாவின் டைம்ஸ் ஒவ் இந்தியா தெரிவித்துள்ளது.

மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்றுள்ள செய்தி குறித்த தனது செய்தியிலேயே டைம்ஸ் ஒவ் இந்தியா இதனை தெரிவித்துள்ளது.

அரசமைப்பின் 19 வது திருத்தம் பெரும்பான்மை இல்லாத நிலையில் பிரதமரை பதவிவிலக்குவதற்கு அனுமதிக்கவில்லை என தெரிவித்துள்ள அரசியல் ஆய்வாளர்கள் இதன் காரணமாக மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமிக்கும் சிறிசேனவின் முடிவினால் அரசமைப்பு நெருக்கடி ஏற்படலாம் என தெரிவிக்கின்றனர் என இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.

ராஜபக்சவிற்கும் சிறிசேனவிற்கும் 95 ஆசனங்களே உள்ளன ரணில் விக்கிரமசிங்கவிற்கு 106 ஆசனங்கள் உள்ளன என இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.

————-

ராஜபக்சே இலங்கை பிரதமரானது தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என சென்னையில் பேசிய இலங்கை அமைச்சர் ரவூப் ஹக்கிம் கருத்து தெரிவித்துள்ளார். இலங்கை அதிபர் சிறிசேன தற்போது ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளதாக அவர் கூறினார்.

Related posts