சம்மந்தன் மகிந்த சந்திப்பும் இன்றைய இலங்கையும்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.

விஜேராமவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இன்று விஷேட கூட்டம் ஒன்று இடம்பெற உள்ளது.

அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இதனைக் கூறினார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக அவர் கூறினார்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் குறித்து இதன்போது பேசப்பட உள்ளதாக அவர் மேலும் கூறினார்.

——————–

பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

பாராளுமன்ற அரசியல் கட்சிகள் சில மற்றும் சர்வதேச நாடுகள் சபாநாயகரிடம் விடுத்துள்ள கோரிக்கைக்கு அமைவாக சபாநாயகர் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார்.

பாராளுமன்ற அமர்வுகளை எதிர்வரும் நவம்பர் 16ம் திகதி வரை ஒத்தி வைக்கும் விஷேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த சனிக்கிழமை வௌியிடப்பட்டது.

——————-

இலங்கையில் திடீரென ஏற்பட்டுள்ள அரசியல் நிலையற்றதன்மை மற்றும் அமைதியின்மை காரணமாக நாடு ஆபத்தை எதிர்நோக்கயுள்ளது என ஐரோப்பிய ஒன்றியம் கூறுகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடியாக பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறுகிறது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம் இதனைக் கூறியுள்ளது.

நாட்டின் அரசியலமைப்பை மதிக்கும் ஒரு தீர்வை விரைவாக பெற்றுக் கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஐரோப்பிய ஒன்றியம் ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை இலங்கையின் உள்ளக அரசியல் நடவடிக்கைகளில் சீனா தலையீடு செய்வதில்லை என்று சீன வௌிவிவகார அமைச்சின் பேச்சாளர் கூறியுள்ளார்.

இலங்கையின் அரசியல் கட்சிகள் பேச்சுவார்த்தை மூலமாக பிரச்சினையை தீர்த்துக் கொள்ளும் என்று சீனா எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.

——————

ஜனாதிபதியினால் புதிய பிரதமர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய தேசிய கட்சியினால் ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று மதியம் 12 மணிக்கு கொள்ளுபிட்டிய சந்தியில் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

´நீதியின் குரல்´ எனும் பெயரில் குறித்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் நாட்டின் பிரதான நகரங்களுக்கு அருகில் இவ்வாறான ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

—————–

நாம் ஆட்சியில் பங்கெடுத்திருந்த காலத்தில் ஓய்வின்றி உழைத்து பெரும் பணியைச் செய்திருக்கின்றோம் என்பது ஊர் பார்த்த உண்மையாக உள்ளது என புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மீண்டும் ஆட்சியில் பங்கெடுத்தால் முன்னரை விடவும் கூடுதலான முயற்சிகளை செய்து யுத்தம் இல்லாத இந்தச் சூழலில் எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க உழைப்போம் என்ற நம்பிக்கையுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
——————

கொழும்பில் இன்று எந்தவொரு அசம்பாவிதங்களும் இடம்பெறுவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பொலிஸ் மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர இதனைக் கூறியுள்ளார்.

ஜனாதிபதியினால் புதிய பிரதமர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய தேசிய கட்சியினால் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே பொலிஸ் மா அதிபர் இந்த ஆலோசனை வழங்கியுள்ளார்.

Related posts