ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் புதிய பிரதமர் ஒருவர் இன்று நியமிக்க படுவதற்கான சூழ்நிலை இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது !
இதற்காக ஐக்கிய தேசிய முன்னணியை சேர்ந்த மூவர் பெயர்கள் கூறப்படுகின்றன !
ஒன்று திலக் மாரப்பன இரண்டு ரஞ்சித் மத்துமபண்டார மூன்று ராஜித்த சேனாரத்ன ஆகிய மூவரின் பெயர்களே உலா போகின்றன.
இதற்கிடையில் நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்ச பெரும்பான்மையை நிரூபிக்க தவறிவிட்டார் என்று தமிழர் கூட்டமைப்பு கூறியிருக்கிறது !
இதனால் ஜனாதிபதிக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளனர் அக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது; கடந்த அக்டோபர் 26ம் திகதி பிரதமர் ஆக்கப்பட்ட மகிந்த பெரும்பான்மையை நிரூபிக்க வில்லை, ஆகவே பெரும்பான்மை உள்ள ஒருவரை பிரதமராக நியமிக்க தமிழர் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என்று ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளனர்.
இதேவேளை ரணில் விக்கிரமசிங்கா தமிழர் கூட்டமைப்பிற்கு ஒரு கடிதம் வழங்கி இருக்கிறார்.
அக்கடிதத்தில் அடுத்த ஆண்டு 2019 மாசி மாதம் வர இருக்கின்ற இலங்கை சுதந்திர தினத்திற்கு முன்னதாக.” புதிய அரசியல் அமைப்பை நிறைவேற்ற தயார் !” என்று தெரிவித்துளார் !
இந்த நிலையில் தமிழர் கூட்டமைப்பிற்கும் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையே நேற்று மாலை ஒரு சந்திப்பு அலரி மாளிகையில் நடைபெற்றது .இதில் சம்மந்தர் , ரணில். சஜித் பிரேமதாஸ , மங்கள சமரவீர உட்பட 12 பேர் கலந்து கொண்டனர்.
இதே கோரிக்கையை மஹிந்தவிடம் சம்மந்தர் கோரியிருந்தார் , ஆனால் மஹிந்த எழுத்துமூலம் வாக்குறுதியை வழங்க மறுத்துவிட்டார் ; இந்த நிலையில் ரணில் வாக்குறுதியை எழுத்து மூலம் வழங்கி இருப்பதனால் கூட்டமைப்பு இப்போது ரணில் பக்கமாக நிற்கிறது .
குறித்த காலத்திற்குள் ரணில் கடமையை நிறைவேற்றாவிட்டால் கூட்டமைப்பு விலகி விடும் என்றும் கூறியுள்ளனர்.
இதில் வேடிக்கை என்னவென்றால் இதே கடிதத்தை முன்னர் கூட்டமைப்பு மகிந்தவிடம் கோர அவர் தலை தெறிக்க ஓடியதும், சம்மந்தனை திட்டியதும் காணொளிகளில் தெரிந்த கூத்தாகும்.
அதேவேளை மைத்திரி போர்க்குற்றத்துடன் சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய முயன்றபோதுதான் இத்தகைய அரசியல் குழப்பங்கள் வந்தனவா என்ற சந்தேகமும் இருக்கத்தான் செய்கிறது. காரணம் இந்த விடயத்தில் இந்தியா அமெரிக்கா காக்கும் மௌம் ஏதோ ஒரு காரியம் நடந்துள்ளதை காட்டுகிறது.
இதற்கிடையில் முக்கிய கடற்படை அதிகாரி ஒருவர் கைதானது இதை மேலும் ஒரு படி உறுதிப்படுத்துகிறது.
இதற்குள் ஒரு நாடகம் நடக்கிறதா..? அந்த நாடகத்தை நடத்தும் சக்தி ஒன்று இருக்கிறதா..? அந்த மாயக்கரம்தான் மைத்திரியை அதிபராக கொண்டு வந்ததா..?
ஐயா.. இப்படி பல கேள்விகள்…?
பிரதமர் பதவியை கண்டதும் மகிந்த தனது பழைய கில்லாடிகளை கைவிட முயல்வார் என்பதை காட்டவே இந்த நாடகங்கள் அரங்கேறினவா என்பது ஒரு சந்தேகம். ஆனால் இதற்கு ஆதராம் இல்லை.
இதற்கிடையில்; இலங்கையில் நடைபெறும் அரசியல் குழப்பங்கள் அந்த நாட்டின் நாணயத்தை தொடர்ந்து பெறுமதி இழக்க செய்து வருகின்றன. இதனால் இலங்கை ரூபா இன்று அமெரிக்க டாலருக்கு சமமாக 182 ரூபாய் என்ற அளவிற்கு வீழ்ச்சி அடைந்ததுள்ளது !
இதனால் புலம்பெயர் தமிழர் இலங்கையின் வங்கிகளில் வட்டிக்காக முதலிட்ட பெருந்தொகை பணம் நாளுக்கு நாள் பெறுமதியை இழந்து செல்கிறது.
இப்படி விவகாரங்கள் போக நேற்று யாழ்ப்பாணம் நல்லூர் வைமன் வீதியில் உள்ள வீடொன்றின் மீது அதிகாலை 2 மணியளவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு, வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு முச்சக்கர வண்டிகள் தீப்பற்றி எரிந்துள்ளன!
இது யாழ்ப்பாணம் மறுபடியும் குண்டு கலாச்சாரத்திற்குள் போகிறதா.. இல்லை இதுவும் திட்டமிட்ட நாடகமா என்ற கேள்விகள் உள்ளன…?
இன்றைய இலங்கை செய்தி தொகுப்பை எழுதியது அலைகள் ரோபோ. இது தமிழ் எழுத்து துறையில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றம் ஆகும்.
கூகுள் வெளியிட்டுள்ள இந்த திட்டத்தை எப்படி பயன்படுத்துவது என்பது ஒரு சவாலாக இருப்பதனால் பலர் பயன்படுத்துவதில்லை ஆனால் அலைகள் செய்திப்பிரிவு இந்த இயந்திரத்தை கச்சிதமாக பயன்படுத்தும் இரகசியத்தை அறிந்துள்ளது.
தமிழ் மொழியை சரியாக சந்தி பிரிக்கவும், துல்லியமாக உச்சரிக்கவும் தெரிந்தால் இது கைகூடும். முக்கியம் மொழி அறிவு அடுத்தது கூகுளின் வேகத்திற்கு ஏற்ப தாள ஒழுங்கு இருக்க வேண்டும்.
அலைகள் 30 11 2018