Year: 2018
நீதிக்கான போராட்டத்துக்கு வியூகம் அமைக்கிறது ஐ.தே.க.
சாமிநாதய்யரின் உழைப்புக்கு கொஞ்சமும் குறைந்ததல்ல ஜெயராமனின் உழைப்பு
அகில இலங்கை உதைபந்தாட்ட அணியில் இடம் பெறவுள்ள தமிழ் வீரர்கள் யார்..?
அகில இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உப செயலாளர் திரு. அருளானந்தசோதி உலகப் புகழ் பெற்ற பத்து உதைபந்தாட்ட வீரர்கள் என்ற நூலை தாயகத்தின் உதைபந்தாட்ட வீரர்களுக்கும் மத்தியஸ்தர்களுக்கும் வழங்கி ஆட்டங்களை ஆரம்பித்து வைத்தார். வல்வை எப்.சி. இணைப்பாளரும், விளையாட்டுத்துறை அதிகாரியுமான ஜிவிந்தன் நூல் வழங்கும் ஏற்பாடுகளை ரியூப் தமிழுடன் இணைந்து மேற்கொள்ள களை கட்டியிருக்கிறது வடக்கின் உதைபந்தாட்டம். இனி விபரமாக… அகில இலங்கை உதைபந்தாட்ட அணியில் இடம் பெறப்போகும் தமிழ் வீரர்கள் யார்.. எத்தனை பேருக்கு வாய்ப்புக்கள் உள்ளன..? இன்று வடக்கே ஒளிரும் பரபரப்பான கேள்வி இதுதான். பலர் இடம் பெறுவதற்கான வாய்ப்புக்கள் பிரகாசமாக தெரிகின்றன என்கிறார்கள் பயிற்சியாளர்கள். இலங்கை அணிக்கு பருத்தித்துறை லீக்கில் இருந்து வீரர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்வுப் போட்டிகள் இன்றிலிருந்து மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெற இருக்கின்றன. இந்தப் போட்டிகள் இன்று காலை…
டத்தோ’ பட்டம் சர்ச்சை: சின்மயி கருத்துக்கு ராதாரவி பதிலடி
டத்தோ’ பட்டம் பொய் என்று சின்மயி தெரிவித்துள்ள கருத்துகளுக்கு ராதாரவி பதிலடி கொடுத்துள்ளார். பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது மீ டூ வாயிலாக புகார் தெரிவித்ததிலிருந்து சின்மயியைப் பற்றி ராதாரவி விமர்சிப்பதும் அதற்கு சின்மயி பதிலடி கொடுப்பதும் வழக்கமானதாக இருந்தது. ஒருகட்டத்தில், மீ டூ போச்சு டப்பிங் யூனியன் வந்துச்சு என்கிற கதையாக மாறிப்போனது. வைரமுத்து – சின்மயி விவகாரம் என்பது போய், ராதாரவி – சின்மயி மோதல் என்றானது. இதனைத் தொடர்ந்து ராதாரவி வைத்திருக்கும் டத்தோ பட்டம் பொய் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார் சின்மயி. மேலும், அதற்கான விளக்கங்கள் மற்றும் மெலாகா அரசு தெரிவித்தது ஆகியவற்றையும் வெளியிட்டார். இதனால் பெரும் சர்ச்சை உருவானது. ‘டத்தோ’ பட்டம் சர்ச்சைத் தொடர்பாக ராதாரவி கூறியிருப்பதாவது: வைரமுத்து மீது சொன்ன புகார் எடுபடாமல் போனதால் டத்தோ…
உள்குத்து அரசியல் என விஷ்ணு விஷால் கடும் சாடல்
டிசம்பர் 21-ம் தேதி வெளியீடு சர்ச்சை தொடர்பாக உள்குத்து அரசியல் தான் காரணம் என விஷ்ணு விஷால் கடுமையாக சாடியுள்ளார். முதலாவதாக டிசம்பர் 21-ம் தேதி வெளியீடாக ஜெயம் ரவி நடித்துள்ள ‘அடங்க மறு’, விஜய் சேதுபதி நடித்துள்ள ‘சீதக்காதி’, விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ ஆகிய படங்கள் உறுதிப்படுத்தியது தயாரிப்பாளர் சங்கம். அதனைத் தொடர்ந்து தனுஷ் நடித்து தயாரித்துள்ள ‘மாரி 2’ மற்றும் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள ‘கனா’ ஆகியவை இப்போட்டியில் இணைந்தன. இதனால், இதர படங்களின் தயாரிப்பாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்தார்கள். மேலும், தொடர்ச்சியாகக் குழப்பம் நீடித்ததால் டிசம்பர் 21-ம் தேதி யார் வேண்டுமானாலும் படத்தை வெளியிட்டுக் கொள்ளலாம் என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்து விலகிக் கொண்டது. டிசம்பர் 21-ம் தேதி வெளியீட்டு சர்ச்சையில் தயாரிப்பாளர் சங்கத்தில் நிலவும் உள்குத்து அரசியலே காரணம் என்று தனது…
இரணைமடு நீர்த்தேக்கம் ஜனாதிபதியால் மக்களிடம் கையளிப்பு
நாட்டின் விவசாய சமூகத்திற்காக அரச தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களது மற்றுமொரு எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட இரணைமடு நீர்த்தேக்கம் இன்று (07) முற்பகல் ஜனாதிபதியால் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது. நாட்டின் விவசாய சமூகத்தின் நீர்ப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதற்கு தனது அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலில் முக்கிய இடம் வழங்கியிருக்கும் ஜனாதிபதியின் முழுமையான வழிகாட்டலின் கீழ் மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நிர்மாணப் பணிகளுடன் இணைந்ததாக ஆரம்பிக்கப்பட்ட நீர்ப்பாசன செயற்திட்டங்களில் இரண்டாவது கட்டமாக வடக்கின் பாரிய நீர்த்தேக்கமான கிளிநொச்சி, இரணைமடு நீர்த்தேக்கத்தின் புனர்நிர்மாணப் பணிகள் 2015ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 1975ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்நீர்த்தேக்கத்தில் புனர்நிர்மாணப் பணிகள் இடம்பெற்றமை இதுவே முதற் தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. புனரமைப்பு செய்யப்பட்டுள்ள இந்த இரணைமடு நீர்த்தேக்கத்தின் மூலம் 9,180 குடும்பங்கள் பயன்பெறுவதுடன், 21,000 ஏக்கர் விவசாய நிலத்தில் இரண்டு…
யாழ். மாநகர சபையில் வரவு செலவுத்திட்டம் தோல்வி
யாழ். மாநகர சபையின் அமர்வு இன்று வெள்ளிக்கிழமை (07-12-2018) காலை 10 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றது. இதன் போது யாழ். மாநகர சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் சபையில் சமர்ப்பித்தார். மக்களின் அபிவிருத்தித் திட்டங்கள் உள்வாங்கப்படாமல் ஆடம்பரமான வரவு செலவுத்திட்டமாக காணப்படுவதால் குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் சபையில் தெரிவித்தனர். எனினும், குறித்த வரவு செலவுத்திட்டத்தை தோற்கடிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டமாக தாம் கருதவில்லை எனத் தெரிவித்த யாழ். மாநகர சபையின் முதல்வர் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளுமாறும் சபை உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார். மாநகர சபையின் அமர்வு மதியநேர உணவு வேளையின் பின்னர் மீண்டும் ஆரம்பமான போது வரவு செலவுத்திட்டத்துக்கான செலவீன சீர்திருத்தங்கள் தொடர்பான விவாதம் ஆரம்பானது. இதன்போது வருமானத்தில் 350 மில்லியன் ரூபா குறைகின்ற…
குவாவிஸ் தொலைபேசி நிறுவனத்திடம் டென்மார்க் ரிடிசியின் ஈரல் குலை
சீனாவின் பாகாசுர தொலை பேசி நிறுவனமான குவாவிஸ் டென்மார்க்கின் பாரிய தொலைபேசி நிறுவனமான ரிடிசியை நவீனப்படுத்தும் பொறுப்பை 2013ம் ஆண்டில் ஏற்றது, இந்த ஒப்பந்தம் ஆறு ஆண்டு காலத்திற்குரியது. இப்போது பிரிட்டனின் 4 ஜி அலைவரிசையில் இயங்கும் டென்மார்க் தெலைபேசி சேவை வலையாக்கம் 5 ஜிக்கு மாற்றப்படுகிறது. இதற்கான பணிகளை சீனாவின் பகாசுர நிறுவனமான குவாவிஸ் மேற்கொள்கிறது. இவர்கள் பிரிட்டனின் கருவிகளை அப்புறப்படுத்த ஆரம்பித்துவிட்டனர். இவர்களிடம் இந்தப் பணியை ஒப்படைத்தால் டென்மார்க்கிற்குள் சீனாவின் உளவுப்பிரிவு இலகுவாக உள் நுழைந்துவிடுமென பிரித்தானிய உளவுப்பிரிவான எம்.ஐ.6 எச்சரித்துள்ளது. ஐந்து ஜி வலையாக்கம் வேகமாக இயங்கவல்லது ஆனால் சீனாவின் கையில் டென்மார்க் தனது ஈரல் குலையை கொடுத்தது போலாகிவிடும் விவகாரம் என்று நிபுணர்கள் அச்சப்படுகின்றனர். ஸ்ராட் – ஸ்ரொப் ஆகிய இரு பணிகளையும் சீனாவிடம் ஒப்படைத்துவிட்டு கைகட்டி நிற்கவேண்டிய நிலை டென்மார்க்கின்…
ஏஞ்சலா மேர்க்கல் தலைமைப் பதவியில் இருந்து விலகினார்
ஜேர்மனியின் அரசியல் வானிலும் ஐரோப்பிய ஒன்றிய மேடையிலும் புகழ் பெற்ற இரும்புப் பெண்மணியாக வலம் வந்தவர் ஜேர்மனிய சாஞ்சிலர் ஏஞ்சலா மேர்க்கலாகும். நான்கு தடவைகள் தேர்தலில் வெற்றி பெற்றவர், சுமார் 18 வருடங்கள் புகழ் மிக்க பெண்மணியாக இருந்தவர். உலகின் முதல் பெண்மணியாக பல தடவைகள் தேர்வு செய்யப்பட்டவர். கடந்த தேர்தலில் இவர் வெற்றி பெற்றாலும் கட்சி செல்வாக்கிழக்க ஆரம்பித்துவிட்டது. ஆகவே கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து வெளியேற வேண்டிய நெருக்குவாரம் ஏற்பட்டது. இந்த நிலையில் கட்சியின் புதிய தலைவராக இவருடைய ஆதரவைப் பெற்ற மினி மேர்க்கல் அல்லது ஏ.கே.கே என்று அழைக்கப்படும் அனகிரேற் கிறம்ப் காறின்பேகர் என்ற 56 வயது பெண்மணி தேர்வானார். தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் இறுதிச் சுற்றில் மினி மேர்க்கலுக்கு 517 வாக்குகள் கிடைத்தன, இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரட்றிக் மாஸ்…