டென்மார்க் வீபோ நகரத்தில் வாழ்ந்தவரும், டென்மார்க் சட்டக்கல்லூரியின் முன்னாள் மாணவனுமான அமரர் ஜனுஸ்சன் சிவகுமாரின் 41வது நாள் நினைவுதினம் இன்றாகும். அமரர். ஜனுஸ்சன் சிவகுமார் நூலாசிரியர் கி.செ.துரையின் மாணவனாகும். பாடசாலைக்காலத்தில் நூலாசிரியரின் நாடகங்களிலும் நடித்துள்ளார். இன்றைய தினத்தில் அவருடைய பெற்றோரிடம் உலகப்புகழ் பெற்ற பத்து உதைபந்தாட்ட வீரர்கள் என்ற புத்தகத்தை நூலாசிரியர் கி.செ.துரையால் வழங்கப்பட்டது. இவருடைய நினைவாக நாளை தாயகத்தில் உள்ள 100 உதைபந்தாட்ட வீரர்களுக்கு இந்த நூல் வழங்கப்பட இருக்கிறது. அகில இலங்கை உதைபந்தாட்டக் குழுவில் இடம் பெறுவதற்கான 23 வயதுக்குக் கீழ்ப்பட்ட வீரர்களை தேர்வு செய்யும் ஆட்டம் பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக்கினால் நடத்தப்படுகிறது. தொடர்ந்து மூன்று தினங்கள் நடைபெறும் இந்த போட்டிகளில் பல்வேறு கழகங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வீரர்கள் பங்கேற்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் காலம் சென்ற செல்வன் ஜனுஸ்சன் சிவகுமாரின் ஞாபகார்த்தமாக இந்த நூல்…
Year: 2018
டென்மார்க்கில் பாடசாலை போவதை வெறுக்கும் பிள்ளைகள் தொகை அதிகரிக்கிறது
டென்மார்க்கில் பாடசாலைக்கு போவதை வெறுக்கும் பிள்ளைகளின் தொகை அதிகரிப்பதாக சமுதாய நலவாழ்வு பிரிவு நடத்திய ஆய்வு வெளியானது. அதேவேளை குடும்பப் பின்னணி பிள்ளைகளின் கல்வி மீதான நாட்டத்தை தீர்மானிப்பதில் முக்கிய பாத்திரம் வகிப்பதாகவும் தெரிவிக்கிறது. மொத்தம் 7697 பிள்ளைகளிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பிள்ளைகள் 3 வயது முதல் 19 வயதுக்கு இடைப்பட்டவர்களாகும். 15 வயது பிள்ளைகளை எடுத்துக் கொண்டால் 2009ம் ஆண்டில் பின்தங்கிய குடும்பப் பிள்ளைகளின் தொகை எட்டு வீதமாகும். அதேவேளை இந்தத் தொகையானது 2017ம் ஆண்லோ 12 வீதமாக உயர்வு பெற்றுள்ளது. ஆகவே பின்தங்கிய குடும்பங்களின் எண்ணிக்கையின் உயர்வானது பாடசாலை போவதை வெறுக்கும் மாணவர் தொகையையும் உயர்த்துவதாக இருக்கிறது. வசதி கூடிய குடும்பங்களின் பிள்ளைகள் வேக வளர்ச்சி பெற, பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களில் இருந்து வந்த பிள்ளைகள் பின்னடைவு கண்டு சென்றுள்ளன. இதற்கு…