சில வேளைகளில் ஒரு செய்தியை நாம் பேச வேண்டிய தேவையில்லை.. வார்த்தைகளோ உரையாடல்களோ இல்லாமல் ஒரு முழு நீள திரைப்படத்தின் கதையை குறும்படத்தால் பேசிவிடலாம் என்பார்கள். அதற்கு உதாரணமாக இருக்கிறது இந்த குறும்படம்.
இதன் இயக்குநர் டிலக்ஷன் ஜெயரத்தினம் இன்று சிறந்த பாடகர் மட்டுமல்ல சிறந்த இசை நாடக நடிகராகவும் இருக்கிறார். டேனிஸ் இசை நாடகத்துறையில் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறார்.
இதில் நடித்துள்ள சயன் யோகராஜா முழு நீள திரைப்படமான யாகன் என்ற திரைப்படத்தில் நடித்த சிறந்த கலைஞர். நடனம் உட்பட பல்வேறு திறமைகளை தன்னகத்தே கொண்ட கலை ஆர்வலர்.
பெண்பாத்திரம் ஏற்று நடித்த டாக்டர் ராகமி ராஜலிங்கம் ஐ.பி.சி நடனப்போட்டியில் டென்மார்க்கில் இருந்து தேர்வாகி இறுதிச் சுற்றுக்கு சென்றவராகும். கலைத்துறையில் நீண்ட காலம் தொடர்ந்து பயணிக்கும் ஒருவர்.
இவர்கள் இணைந்தால் படைப்பின் தரம் எப்படியிருக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமோ..? அதுவும் சிறந்த இசையோடு வழங்கியிருக்கிறார்கள்.
அவள் யார்..? அவனுக்கு என்ன நடந்தது..? அவளைப்பற்றி அவன் என்னதான் எழுதப்போகிறான்.. ? ஒரு முழு நீள திரைப்படத்தின் தாக்கத்தை மொழியில்லாது இந்தக்குறும் படம் ஏற்படுத்திவிட்டுப் போகிறது.
பாருங்கள் கண்டிப்பாக பாராட்டுவீர்கள்..
திறமைகளை வரவேற்பதும் பாராட்டுவதும் சமுதாயக்கடமை.. இவற்றை பாராட்டாமல் சமுதாய கடமை என்று பேசினால் எங்கோ பிழையிருக்கிறது.. அதையும் ஒரு குறும்படமாக தரலாம்.
நல்ல விடயங்களை எல்லாம் இதுவும் கடந்துவிடுமென்று அப்பால் போய் கெட்ட விடயங்களை கடந்து போகவிடாது வைத்திருக்கும் பழக்கத்தை அழகான குறும்படமாக எப்படிக் காட்டுவது..?
அலைகள் 08.01.2019