பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி மெஹ்மூத் குரேஷி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இலங்கை சென்றுள்ளார். இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை இன்று சந்தித்த அவர் இருநாட்டிற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த சந்திப்பின் போது பாகிஸ்தான் பிரதமர் ஆரிப் அல்வி, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை பாகிஸ்தானுக்கு வருமாறு அழைப்பு விடுத்து எழுதிய கடித்ததை இலங்கை அதிபரிடம் ஒப்படைத்தார்.
பின்னர் இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குனவர்தனாவை குரேஷி சந்தித்து பேசினார். இந்த சந்த்திப்பின் போது வர்த்தகம், சுற்றுலா, முதலீடு மற்றும் இரு நாட்டுக்கும் இடையிலான பரஸ்பர உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.